தலைப்பு செய்திகள்
2 நாள் பயணமாக தஞ்சை வந்துள்ள ஆளுநர் ஆர்.என். ரவி.
2 நாள் பயணமாக தஞ்சை வந்துள்ள ஆளுநர் ஆர்.என். ரவி முன்னாள் படைவீரர்களுடன் கலந்துரையாடி பின்னர் சரஸ்வதி மகால் நூலகத்திற்கு சென்று ஓலைச்சுவடிகள் உள்ளிட்டவைகளையும் தஞ்சை பெரிய கோவில் பார்வையிட்டார்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி 2 நாள் பயணமாக தஞ்சை வந்துள்ளார் சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்த அவர் திருச்சியில் இருந்து கார் மூலமாக தஞ்சை வந்து சுற்றுலா மாளிகையில் தங்கினார் அங்கு முன்னாள் படை வீரர்கள் 20 பேர்களை சந்தித்து ஆளுநர் ரவி கலந்துரையாடி குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
அப்போது முன்னாள் படை வீரர்களுக்கான இட ஒதுக்கீட்டில் ஜாதி அடிப்படையிலான ஒதுக்கீட்டை நீக்க வேண்டும் முன்னாள் படைவீரர்கள் துறையில் மற்ற மாநிலங்களில் 100 சதவிகிதம் முன்னாள் படைவீரர்கள் மட்டுமே உள்ளனர் இதைப்போல் தமிழகத்திலும் கொண்டு வரவேண்டும் தமிழக நிதிநிலை அறிக்கையில் முன்னாள் படைவீரர்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் மருத்துவக் கல்வியில் முன்னாள் படை வீரர்கள் குடும்பத்தினருக்கு வெறும் 15 சீட்டுகள் மட்டுமே 20 ஆண்டுகளாக வழங்கப்பட்டு வருகிறது. எனவே 1 அல்லது 2 சதவிகித அடிப்படையில் மருத்துவக் கல்வியில் இடம் வழங்க வேண்டும் மாநில அளவில் மற்றும் மாவட்ட அளவில் நடத்தவேண்டிய முன்னாள் படை வீரர்கள் கூட்டத்தையும் நடத்த வேண்டும் என அப்போது முன்னாள் படைவீரர்கள் வலியுறுத்தினர்.
இதனைத் தொடர்ந்து ஆளுநர் ஆர் என் ரவி தஞ்சை அரண்மனை வளாகத்திற்கு சென்றார் அங்கு சிவாஜி ராவ் போன்ஸ்லே உள்ளிட்டவர்கள் வரவேற்றனர் பின்னர் சரஸ்வதி மகால் நூலகத்தை ஆளுநர் ஆர்.என் ரவி பார்வையிட்டார் ஓலைச்சுவடிகள் பழங்கால ஆவணங்கள் ஓவியங்கள் உள்ளிட்ட அனைத்தையும் பார்வையிட்டு அதன் பழமையையும் வரலாற்றையும் கேட்டு தெரிந்து கொண்டார். இதனைத் தொடர்ந்து தஞ்சை பெரிய கோவிலில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பட்டு வேஷ்டி துண்டு அணிந்து மனைவியுடன் வந்து பார்வையிட்டு சாமி தரிசனம் செய்தார். தஞ்சை பெரிய கோவில் வந்த ஆளுநருக்கு பூரண கும்பம் மரியாதை செய்யப்பட்டது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.