தலைப்பு செய்திகள்
40 பேருக்கும் ஊதியம் வழங்கியதில் தமிழக அரசின் நிதி 40 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதால் சி.பி.ஐ விசாரணை வேண்டும்.

தஞ்சை தமிழ்ப் பல்கலை கழகத்தில் முந்தய அ.தி.மு.க ஆட்சியில் தகுதியற்றவர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு, பேராசிரியர் பணிக்கு 50 லட்சம், உதவி பேராசிரியர் பணிக்கு 40 லட்சம் என 40 பேரிடம் லஞ்சம் வாங்கி பணிநியமனம் செய்த விவகாரத்தில், லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை மிகவும் தாமதமாவதால் இதுவரை 40 பேருக்கும் ஊதியம் வழங்கியதில் தமிழக அரசின் நிதி 40 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதால் சி.பி.ஐ விசாரணை வேண்டும், இனி டி.என்.பி.சி மூலம் மட்டுமே பணிநியமனம் செய்திடவும் பொதுநலன் வழக்கு தொடர்ந்துள்ள சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்.

தஞ்சை தமிழ்ப் பல்கலை கழகத்தில் முந்திய அ.தி.மு.க ஆட்சியில் 2017 ம் ஆண்டு அப்போது துணைவேந்தராக இருந்த பாஸ்கரன் பணியில் இருந்த போது உரிய தகுதி இல்லாதவர்களை 50 லட்சம், 40 லட்சம் என லஞ்சம் வாங்கிக்கொண்டு 40 பணியிடங்களை நிரப்பிய விவகாரத்தில், லஞ்ச ஒழிப்பு போலீசாரின் விசாரணை தாமதமாக நடைபெற்று வருவதால் தமிழக அரசுக்கு 40 கோடி ரூபாய் வரை நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதால் லஞ்சப் புகாரை சிபிஐ விசாரித்திட வேண்டும் என்றும், இனிமேல் எந்த ஒரு பணியும் தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தின் மூலமே நிரப்பிட வேண்டும் என்றும் வலியுறுத்திய சமூக ஆர்வலர் நெடுஞ்செழியன் எஸ்.சி, எஸ்.டி மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையை மாணவர்களுக்கு வாங்காமல் அந்த நிதியும் மோசடி செய்யப்பட்டுள்ளது என்பதால் உயர்நிலை கல்வி மையமான தஞ்சை தமிழ்ப் பல்கலை கழகத்தை காப்பாற்றிட விரைவாக தகுதி இல்லாத பேராசிரியர்கள் உள்ளிட்டோரை பணி நீக்கம் செய்திடவும் வலியுறுத்தினார்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
