தலைப்பு செய்திகள்
ரஷ்ய அதிபர் புடின் மன ரீதியாக பாதிக்கப்பட்டு இருக்கலாம்.

மாஸ்கோ: ரஷ்ய அதிபர் புடின் மன ரீதியாக பாதிக்கப்பட்டு இருக்கலாம், அவருக்கு மூளையில் சில முக்கியமான பாதிப்புகள் ஏற்பட்டு இருக்கலாம் என்று யு.கே ஊடகங்கள் மற்றும் உளவுத்துறை ரிப்போர்ட் தெரிவித்துள்ளது.
உக்ரைன் ரஷ்ய இடையிலான போர் தீவிரமாக நடந்து வருகிறது. இதுவரையிலான போரில் ரஷ்யாவின் கையே ஓங்கி உள்ளது. ரஷ்யா மிகவும் மெதுவாக படைகளை நகர்த்திக்கொண்டு இருந்தாலும், உக்ரைன் தரப்பிற்கு பெரிய சேதம் ஏற்பட்டுள்ளது.

ரஷ்ய சில முக்கியமான திட்டங்களை மனதில் வைத்தே உக்ரைனில் மிகவும் மெதுவாக முன்னேற்றம் அடைந்து வருவதாக தகவல்கள் வருகின்றன. ரஷ்யா தோல்வி அடைவது போல தெரிந்தாலும் இன்னும் போர் ரஷ்யாவின் கட்டுப்பாட்டிலேயே இருப்பதாக தெரிகிறது.
இந்த நிலையில்தான் உக்ரைன் போருக்கு பின் புடின் மிகவும் தனியாக இருப்பதாக புகார்கள் வைக்கப்பட்டன. உக்ரைன் அதிபர் யாருடனும் பேசுவது இல்லை. தனது நெருங்கிய வட்டாரத்தில் உள்ளவர்களிடம் அதிகம் கோபம் அடைகிறார். முன்பெல்லாம் அவர் முகத்தில் உணர்ச்சிகளை காட்ட மாட்டார். ஆனால் இப்போது மிக அதிகமாக கோபம் அடைகிறார். அவர் மன ரீதியாக பாதிக்கப்பட்டு இருப்பது போல தெரிகிறது என்று சிஐஏ மற்றும் யு.கே அதிகாரிகள் ஏற்கனவே பல்வேறு அமெரிக்கா ஊடகங்களில் தெரிவித்து இருந்தனர்.

இந்த நிலையில் அவர் பொது இடங்களுக்கு வருவதை தவிர்ப்பதாகவும், அவருக்கு பார்கின்சன் பாதிப்பு இருக்கலாம் என்றும் டெய்லி மெயில் ரிப்போர்ட் தெரிவித்துள்ளது. இந்த பாதிப்பிற்கு அவர் எடுத்த மருந்து காரணமாக அவரின் மன நிலையில் குழப்பம் ஏற்பட்டு இருக்கலாம். அவர் பார்கின்சன் பாதிப்பிறகு ஸ்டெராய்ட் மருந்துகளை எடுத்து வருகிறார் என்று தோன்றுகிறது. இதனால் அவருக்கு டிமெண்டிஷியா எனப்படும் மறதி வியாதி ஏற்பட்டு இருக்கலாம் என்று டெய்லி மெயில் ஊடகம் தெரிவித்துள்ளது.
யு.கேவை சேர்ந்த உளவுப்படை அதிகாரிகள் தெரிவித்ததாக கூறி இந்த செய்தியை அந்த ஊடகம் வெளியிட்டு இருக்கிறது. இதற்கு முன்பே சில மாதங்கள் முன் புடினுக்கு நடுக்குவாதம் எனப்படும் பார்கின்சன் நோய் இருப்பதாக தகவல்கள் வந்தன. அதாவது இவரின் மைய நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு, அதற்கான முதல் கட்ட அறிகுறிகள் தோன்றியுள்ளது என்றும் கூறப்பட்டது. இவர் கலந்து கொண்ட சில பொது நிகழ்ச்சிகளில் திடீர் என்று எழுந்து நிற்க முடியாமல் இவர் சிரமப்பட்ட வீடியோக்கள் கூட இணையத்தில் வைரலானது.

அதே சமயம் இந்த செய்தியில் உண்மை இல்லை என்று ரஷ்யாவின் அதிபர் அலுவலக வட்டாரங்கள் அப்போதே தெரிவித்தது. இந்த நிலையில்தான் போர் சமயத்தில் தற்போது மீண்டும் இதே செய்தி வெளியாகி உள்ளது. இவர் எடுக்கும் முடிவுகள் முன்பு போல இல்லை. முடிவு எடுக்க முடியாமல் திணறுகிறார். அவர் சிந்தனையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. பார்கின்சன் காரணமாக அவருக்கு டிமென்ஷியா எனப்படும் மறதி பாதிப்புகள் ஏற்பட்டு இருக்கலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

அதோடு யு.கே முன்னாள் வெளியுறவுத்துறை செயலாளர் டேவிட் மற்றும் முன்னாள் பிரிட்டிஷ் சீக்ரெட் சர்வீஸ் தலைவர் ரிச்சர்ட் ஆகியோரும் இந்த தகவலை தெரிவித்துள்ளனர். அவர்களின் கூற்றுப்படி, புடினின் எதிர்ப்பு சக்தி குறைந்துவிட்டது. அவர் அதிக அளவில் ஸ்டிராய்டு மருந்துகளை எடுத்து இருக்கிறார். அவர் நடக்கும் போது பேசும் போது இதற்கான அறிகுறிகள் தெரிகின்றன. அவருக்கு பார்கின்சன் பாதிப்பு காரணமாக இப்படி இருக்க வாய்ப்புகள் உள்ளன, என்று தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
