BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

கன்னியாகுமரி மாவட்டம் சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தினுள் லேத் அமைக்க எதிர்ப்பு.

கன்னியாகுமரி சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் லேத் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் மீன்வளத் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
கன்னியாகுமரி சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தை தங்கு தளமாக கொண்டு சுமார் 350க்கும் மேற்பட்ட மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். சின்னமுட்டம் மீன்பிடி துறைமுக வளாகத்தில் ஒரு பகுதியில் லேத் அமைக்க 20 சென்ட் நிலத்தை தனியாருக்கு குத்தகைக்கு விடப்பட்டு அந்த இடத்தில் அதற்கான முதல்கட்ட பணி தொடங்கியது.இந்நிலையில் லேத் அமைப்பதற்கு அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து சின்னமுட்டம் பங்குதந்தை கிளாசின்,பங்குபேரவை துணை தலைவர் ஜெபஸ்தியான் தலைமையில் மீன்வளத் துறை அலுவலகத்த்தை ஏராளமான பெண்கள் மற்றும் ஆண்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )