தலைப்பு செய்திகள்
ஹிஜாப் அணிவது இஸ்லாமிய சட்டப்படி அத்தியவசியமானதல்ல என்று கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பெங்களூரு: ஹிஜாப் அணிவது இஸ்லாமிய சட்டப்படி அத்தியவசியமானதல்ல என்று கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கர்நாடகாவில் கல்வி நிலையங்களுக்கு ஹிஜாப் அணிந்து வருவதற்கு தடை விதித்ததற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் அம்மாநில உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளித்துள்ளது. தீர்ப்பு காரணமாக பல்வேறு மாவட்டங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன. ஹிஜாப் தடையை எதிர்த்து மாணவிகள் தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. பின்னர், கர்நாடகாவின் பிற பகுதிகளில் உள்ள கல்வி நிலையங்களிலும் ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனிடையே, ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவ, மாணவியரில் சிலர் காவி துண்டு அணிந்து வரத் தொடங்கியதால் பதற்றம் அதிகரித்தது. இந்நிலையில், ஹிஜாப் தடையை எதிர்த்து மாணவிகள் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். தலைமை நீதிபதி ரிது ராஜ் அவஸ்தி, நீதிபதி கிருஷ்ணா எஸ் தீட்சித் மற்றும் நீதிபதி ஜேஎம் காஜி அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்து வந்தது. ஹிஜாப் தடை தொடர்பான வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. விஜயபுராவில், பள்ளிகள், பல்கலைக்கழகங்களுக்கு முந்தைய கல்லூரிகள், பட்டயக் கல்லூரிகள் அல்லது பிற கல்வி நிறுவனங்களின் 200 மீட்டர் சுற்றளவுக்குள் எந்த வகையிலும் கூடுவது, போராட்டம் நடத்துவது தடைசெய்யப்பட்டுள்ளது. உத்தர கன்னடா மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு வெளியேயும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தீர்ப்பு காரணமாக கல்புர்க்கி பகுதியில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. உடுப்பி மற்றும் சிவமொக்காவில் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாணவிகள் தொடர்ந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
