தலைப்பு செய்திகள்
சீனியர் சிட்டிசன்களுக்கு இனி சலுகை கிடையாது.. ரயில்வே அமைச்சர் அதிரடி.
சீனியர் சிட்டிசன்களுக்கு இனி சலுகை கிடையாது.. ரயில்வே அமைச்சர் அதிரடி.
கொரோனா தொற்று காரணமாக நிறுத்தப்பட்ட மூத்த குடிமக்களுக்கான டிக்கெட் விலை குறைப்பு உள்ளிட்ட சலுகைகளை மீண்டும் தொடரும் திட்டம் இல்லை என்று மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்த அவர், “ரயில்வே துறையில் வழங்கப்பட்டு வந்த பல்வேறு சலுகைகள், கொரோனா தொற்று பரவலின் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டன.
இந்நிலையில், தற்போது கொரோனா தொற்று பெருமளவு குறைந்து வந்தாலும், ரயில்வே துறையில் கொரோனா தொற்றால், ஏற்பட்ட பெருமளவு வருவாய் இழப்பை ஈடுகட்டும் நிலை உள்ளது.
இதனால், மூத்த குடிமக்களுக்கான டிக்கெட் விலை குறைப்பு உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் வழங்கப்பட்டு வந்த சலுகைகளை மீண்டும் தொடரும் எண்ணம் தற்போது இல்லை.
மேலும், ரயில் பயணிகளுக்கு வழங்கப்பட்டு வந்த சலுகைகளில் நோயாளிகள், மாணவர்கள் உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்ட 15 சலுகைகள் மட்டும் தொடர்ந்து வழங்கப்படும்” என்று அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.