திசையன்விளை செல்வமருதூர். “பெரிய அம்மன்” கோவில் அஷ்டபந்தன கும்பாபிஷேக விழா. திரளான பக்ததர்கள் பங்கேற்பு.

திசையன்விளை செல்வ மருதூர் பெரிய அம்மன் திருக்கோவில் அஷ்ட பந்தன கும்பாபிஷேகம் நான்கு வேதங்கள் முழங்க தேவார திருமுறை பாராயணத்துடன் கோலாகலமாக நடைபெற்றது.
திசையன்விளை செல்வமருதூர் பெரியம்மன் ஆலய கன்னி விநாயகர், முத்தாரம்மன் , உலகம்மன் ,மாரியம்மன், உச்சினிமாகாளி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு நூதன விக்ரக அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை யாகசாலை வேள்விகளுடன் தொடங்கி புதன்கிழமை காலை விமான கலசங்களுக்கு புனித நீர் அபிஷேகம் செய்யும் நிகழ்வுடன் சிறப்பாக நடைபெற்றது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை மங்கள இசை வாத்தியத்துடன் விக்னேஸ்வர பூஜை மகா கணபதி ஹோமம் பூர்ணாகுதி தீபாராதனை மற்றும் வாஸ்து சாந்தியுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது.
இரண்டாம் நாள் காலை திருமுறை விண்ணப்பமும், மாலை அடைக்கலம் காத்த விநாயகர் அருள் ஆலயத்தில் இருந்து கங்கா பூஜை உடன் புனித நீர் கும்பங்களின் சேகரித்து ஊர்வலமாய் எடுத்துவரப்பட்டு திருக்கோவிலில் சேர்க்கப்பட்டது. தொடர்ந்து முதல் கால யாகசாலை பூஜையும், தீபாராதனையும் நடைபெற்றது.
மூன்றாம் நாள் நாள் செவ்வாய்க்கிழமை காலை இரண்டாம் கால யாகசாலை பூஜையில் சிவ சூர்ய பூஜை ,தோரண பூஜை ,வேதிகா பூஜை போன்றவை நடைபெற்றது. இரவு மூன்றாம் கால யாகசாலை பூஜையும் சுமங்கலி பெண்கள் கலந்து கொண்ட மகாலட்சுமி பூஜையும் நடைபெற்றது. பின்னர் பூஜிக்கப்பட்ட எந்திர தகடுகளை சுவாமி பீடத்தில் பதித்து பூஜைகள் நடைபெற்றது.
நான்காம் நாள் புதன்கிழமை அதிகாலை ரிக் யஜுர், சாம, அதர்வண வேத மந்திரங்கள் சமர்ப்பணத்துடன், தேவார திருமுறை பாராயணத்துடன் பஞ்ச வாத்தியங்கள் முழங்க, மேளதாள ராக கீர்த்தனைகளுடன் நான்காம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. தொடர்ந்து காலை 6.45 மணிக்கு மேல் 7:15 மணிக்குள் கடக லக்னத்தில் விமான கும்பாபிஷேகம் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து 21 வகை திரவியங்களால் மகா அபிஷேகம் ,அர்ச்சனை நடைபெற்றது.
பெரிய அம்மன் திருக்கோவில் அஷ்ட பந்தன கும்பாபிஷேக விழாவில் திசையன்விளை மற்றும் சுற்றுவட்டார மக்கள் ஜாதி சமய பேதமின்றி திரளாக ஒற்றுமையுடன் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் பெற்றனர்.
