தினத்தந்தி செய்தியாளராக பணியாற்றி வந்த ஸ்டீபன் உடல் நலக்குறைவால் காலமான நிலையில் செய்தியாளர் சார்பில் அஞ்சலி.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை யில் 40 ஆண்டுகளுக்கு மேலாக தினத்தந்தி செய்தியாளராக பணியாற்றி வந்த ஸ்டீபன் உடல் நலக்குறைவால் கடந்த 2-ம் தேதி காலமான நிலையில்,
தளி சாலையில் உள்ள தேஜஸ் மஹாலில் உடுமலைப்பேட்டை மடத்துக்குளம் பத்திரிக்கையாளர் மற்றும் தொலைக்காட்சி செய்தியாளர் சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந் நிகழ்ச்சியில் அலங்கரிக்கபட்ட ஸ்டீபன் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய பின் இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தபட்டது . இதில் தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கம் கொழுமம் தாமேதரன்,

உடுமலை தேஜஸ் ரோட்டரி சங்கம் சார்பில் S.M.நாகராஜ். எண்ணம் போல் வாழ்க்கை அறக்கட்டளை நிறுவனர் மற்றும் செய்தியாளர்கள், பத்திரிக்கை ஏஜென்ட்டுகள், உட்பட பலர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
CATEGORIES திருப்பூர்
TAGS உடுமலை தேஜஸ் ரோட்டரி சங்கம்உடுமலைப்பேட்டைதமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கம்தினத்தந்தி செய்தியாளர் ஸ்டீபன்பத்திரிக்கையாளர் அஞ்சலிமடத்துக்குளம்
