திருக்கோவிலூரில் 13 ஆம் நூற்றாண்டு ராஜேந்திர சோழன் காலத்து கல்வெட்டு கண்டெடுப்பு
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் உள்ள கீழையூர் வீரட்டேஸ்வரர் ஆலயத்தில் 13 ஆம் நூற்றாண்டு கால கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது. இது ராஜேந்திர சோழனின் ஆட்சிக்கால கல்வெட்டாகும்.
கீழையூரில் உள்ள இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான 2000 ஆண்டுகளுக்கு முன் மிகப் பழமை வாய்ந்த வீரட்டேஸ்வரர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் வரும் செப்டம்பர் 15ஆம் தேதி தமிழக அரசால் குடமுழுக்கு நடைபெற உள்ளது.
இதை ஒட்டி இவ்வாலயம் புணரமைப்பு செய்யப்பட்டு வருகிறது. அப்பொழுது வீரட்டேஸ்வரர் ஆலயத்தின் முன்பகுதி தரைத்தளத்தை சமன் செய்து கற்பலகையை பதிப்பதற்காக தரையை சமன்படுத்தும் பொழுது கல்வெட்டுக்கள் பொறிக்கப்பட்ட துண்டு கற்தூண்கள் இருந்ததை கண்ட ஆலய நிர்வாகத்தினர் அதனை பத்திரமாக அடுக்கி வைத்தனர்.
பின்னர் கள்ளக்குறிச்சி வரலாற்று ஆய்வு மையத்தினரிடம் தகவல் அளித்தனர்.
அதன்படி கல்வெட்டு ஆய்வாளர்கள் விழுப்புரம் வீரராகவன், சிங்கார உதியன் ஆகியோர் தலைமையில் ஆய்வாளர்கள் விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியின் முனைவர் பட்ட ஆய்வாளர் இம்மானுவேல், நல்நூலகர் அன்பழகன் ஆகியோர் கல்வெட்டுகளை ஆய்வு செய்தனர்.
இக்கல்வெட்டு பல துண்டுகளாக சில எழுத்துக்கள் சிதைந்த நிலையிலும் சிற்பங்களும் இருந்தன.
இதில் சிறியதும் பெரியதுமான ஏழு துண்டுகளாக இருந்த கருத்துண்களில் எழுத்துகள் பொறிக்கப்பட்டிருந்தது.ஒரு கருத்துணில் சிவனை வழிபடுவது போன்ற முனிவர் சிற்பம் பொறிக்கப்பட்டிருந்தது.
கலைந்து கிடந்த கர்ப்புகளில் இருந்த எழுத்துக்களை ஒழுங்குபடித்தி படித்துப் பார்த்தபோது இது ராஜேந்திர சோழன் காலத்து 13 ஆம் நூற்றாண்டு கல்வெட்டு எனவும் கோயிலுக்கு திருவிளக்கு எரிப்பதற்காக நிலம் தானமாக வழங்கப்பட்டதையும், அரசாங்ககுப்பம் அரசாணைந்தால் வழக்காடி குப்பம் திருவெண்ணெய்நல்லூர் போன்ற ஊர் பெயர்களும் பொன் பொருள் நிலம் ஆகியவற்றை தானமாக வழங்கப்பட்டதையும் இக்கல்வெட்டுகளில் இருந்து அறிய முடிகிறது.
முழுமையான ஆராய்ச்சிக்கு பின்னரே இதன் மற்ற விவரங்கள் தெரிய வரும் என இவ் வரலாற்று ஆய்வுக் குழுவினர் தெரிவித்தனர். அப்பொழுது சுந்தரமூர்த்தி, அஜய் மற்றும் பலர் உடன் இருந்தனர்.