BREAKING NEWS

திருச்சி மத்திய மண்டலத்தில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 138 ரேஷன் அரிசி கடத்தல் வழக்கு பதிவு, குற்றப் புலனாய்வுத் துறை டிஜிபி தகவல்.

திருச்சி மத்திய மண்டலத்தில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 138 ரேஷன் அரிசி கடத்தல் வழக்கு பதிவு, குற்றப் புலனாய்வுத் துறை டிஜிபி தகவல்.

திருச்சி மத்திய மண்டலத்தில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 138 ரேஷன் அரிசி கடத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டு 213 குவின்டால் ரேஷன் அரிசி கைப்பற்றப்பட்டு 140 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இது தொடர்பாக தமிழக குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை டிஜிபி வன்னிய பெருமாள் அவர்கள் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது.

தீவிர கண்காணிப்பு.
குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை டிஜிபி உத்தரவின் பேரில் திருச்சி மண்டல போலீஸ் சூப்பிரண்ட் அவர்கள் அறிவுறுத்தலின் பேரில் திருச்சி மண்டலத்திற்குட்பட்ட திருச்சி, கரூர், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை,நாகப்பட்டினம், அரியலூர், மயிலாடுதுறை, ஆகிய மாவட்டங்களில் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க தொடர்ந்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் ஆகஸ்ட் 13 ஆம் தேதி அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் தாலுகா சின்னவளையம் மேம்பாலம் அருகேலோடு வாகனத்தில் கடத்திவரப்பட்ட 1300 கிலோ ரேஷன் அரிசியும், கடந்த ஆகஸ்ட் 16ஆம் தேதி திருச்சி மாவட்டம் புளியஞ்சோலை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்ட 1100 கிலோ ரேஷன் அரிசியும், ஆகஸ்ட் 22 ஆம் தேதி திருச்சி லால்குடி பகுதியில் 1050 கிலோ ரேஷன் அரிசியும் கைப்பற்றிவழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 26 ஆம் தேதி திருச்சி மணப்பாறை பகுதியில் ஒரு தனியார் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1000 கிலோ ரேஷன் அரிசியும் 30ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் கரம்பக்குடி, 16 வேடன் விடுதி சாலையில் நான்கு சக்கர வாகனத்தில்கடத்திவரப்பட்ட 1250 கிலோ ரேஷன் அரிசியும் செப்டம்பர் 4ஆம் தேதி திருச்சி மணச்சநல்லூர் பகுதியில் தனியார் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4000 கிலோ ரேஷன் அரிசியும் கைப்பற்றப்பட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. திருச்சி மண்டலத்தில் கடந்த மாதத்தில்138 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 213 குவின்டால் ரேஷன் அரிசி கைப்பற்றப்பட்டது.

இதுவரை கடத்தலில் ஈடுபட்ட 140 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய ஏழு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. குடிமை பொருள் கடத்தல் தொடர்பானதகவல் பொதுமக்கள் தெரிவிக்கும் பொருட்டு கட்டணம் இல்லா தொலைபேசி எண் 18005995950 தலைமையகத்தில் செயல்பட்டு வருகிறது. இதனை முறையாக பயன்படுத்தும் பொருட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் அனைத்து கிராமங்கள் மற்றும் நகரங்களிலும்சுவரொட்டிகள் மூலம் விளம்பரம் படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் வரும் புகார்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்கும் பொருட்டு தலைமையகத்தில் 24 மணி நேரம் கட்டுப்பாட்டறை இயங்கி வருகிறது.

இதனால் கடத்தல் தொடர்பாக கிடைக்கும் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு ஆய்வறிக்கை வாரம் தோறும் அரசு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. மேலும் திருச்சி மண்டலத்திற்குட்பட்ட பொதுமக்கள் அனைவரும் மேற்படிகட்டணமில்லா தொலைபேசி மூலம் புகார் கொடுக்கலாம் இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தியாளர். பிரபாகரன்

CATEGORIES
TAGS