திருச்செங்கோடு வட்டம் மல்லசமுத்திரம் ஒன்றியம் காளிப்பட்டி கந்தசாமி கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டம் மல்லசமுத்திரம் ஒன்றியம் காளிப்பட்டி கந்தசாமி கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது இதில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்….
சேலம் நாமக்கல் மாவட்ட எல்லையில் அமைந்துள்ள காளிப்பட்டி கந்தசாமி கோயில் கும்பாபிஷேக விழா இன்று காலை 10:30 மணிக்கு நடந்தது கடந்த 17ஆம் தேதி கிராம சாந்தியுடன் விழா தொடங்கியது நேற்று முன்தினம் யாகசாலை பூஜைகள் கோ பூஜை லட்சுமி சரஸ்வதி பூஜை மங்கள இசை உடன் தொடங்கி நடந்தது. தொடர்ந்து நேற்று முதல் கால யாக பூஜைகள் தொடங்கி நடந்தன. மாலை பால கணபதி பூஜை காயத்ரி மந்திரம் நடந்தது. தொடர்ந்துஆறு கால பூஜைகள் நடைபெற்றது. இதனை அடுத்து இன்று காலை சுமார் 10:30 மணிக்கு ராஜகோபுரம் உள்ளிட்ட கோபுர கலசங்களுக்கு திருக்குட நன்னீராட்டு விழா நடைபெற்றது. கருவறையில் மூலவருக்கு திருக்குட நன்னீராட்டு விழா மங்கள ஆரத்தி நடந்தது. நிகழ்ச்சியை ஒட்டி அன்னதான நிகழ்ச்சிகள் நடந்தது மதியத்திற்கு மேல் உற்சவர் சுப்பிரமணியர் வள்ளி தெய்வானை தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை பூஜை நடைபெற்றது. மாலை சுவாமிக்கு திருக்கல்யாண வைபவம் திருவீதி உலா ஆகியவை நடக்க உள்ளது. கும்பாபிஷேக விழாவை சங்ககிரி படைவீடு நடராஜ சிவாஜியர் தலைமையில் சிவாச்சாரியார்கள் நடத்தினர் விழா ஏற்பாடுகளை செயல் அலுவலர் கிருஷ்ணன் பரம்பரை அறங்காவலர் சந்திரலேகா ஆகியோர் செய்திருந்தனர்.