திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி.க்கள் பங்கேற்ற சட்டம் ஒழுங்கு பராமரிப்பு குறித்த ஆய்வு கூட்டம்

கோவில்பட்டியில்
தென்மண்டல ஐ ஜி பிரேம் ஆனந்த் சின்ஹா தலைமையில் திருநெல்வேலி சரக டிஐஜி மற்றும் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி.க்கள் பங்கேற்ற சட்டம் ஒழுங்கு பராமரிப்பு குறித்த ஆய்வு கூட்டம்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில்
தென்மண்டல ஐ ஜி பிரேம் ஆனந்த் சின்ஹா தலைமையில் திருநெல்வேலி சரக டிஐஜி மற்றும் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி.க்கள் பங்கேற்ற சட்டம் ஒழுங்கு பராமரிப்பு குறித்த ஆய்வு கூட்டம் காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.நெல்லை சரக டிஐஜி (பொறுப்பு) மூர்த்தி, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் ஆகியோர் பங்கேற்றனர்.
தென்மாவட்டங்களில் சட்ட ஒழுங்கை பாதுகாத்தல், கூலிப்படைகளின் செயல்பாடுகளை தீவிரமாக கண்காணித்தல், கஞ்சா விற்பனையை ஒழித்தல், ரவுடிகளை ஒடுக்குதல், சமூக மோதலை தடுத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளில் போலீசார் மெத்தனமாக செயல்படுவதாகவும் போலீசார்க்குள்ளேயே கோஷ்டி பூசல் இருப்பதாகவும் கருத்துக்கள் பொதுவெளியில் ஊடகங்களில் சமூக வலைதளங்களில் பரவி வந்த நிலையில் இந்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பொதுமக்களுக்கு எதிராக எந்த குற்றச் செயல் நடந்தாலும், உடனே காவல் துறை உயர் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும். குற்றத் தடுப்பு சம்பவங்களில் தீவிரம் காட்ட வேண்டும். குற்ற பின்னணியை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். காவல் நிலையங்களுக்கு வரும் பொதுமக்களின் புகார்களை அலட்சியம் செய்யக்கூடாது. துரிதமாக விசாரித்து பாதிக்கப்பட்டோருக்கு உரிய நிவாரணம் கிடைக்கச் செய்ய வேண்டும்.
விசாரணை மற்றும் சட்ட நடவடிக்கைகளில் சாதி பார்க்கக் கூடாது. எவ்வித பாரபட்சமும் இருக்கக் கூடாது. கொலை, குற்ற வழக்குகளை முறையாக விசாரிக்க வேண்டும். ரவுடிகள், கூலிப்படைகள், கஞ்சா, போதைப் பொருட்கள், லாட்டரி ஒழித்தல் உள்ளிட்ட குற்றச்செயல்களைத் தடுக்க அக்கறை செலுத்த வேண்டும்.
காவல்துறை மீதான இமேஜ்’ பொதுமக்கள் மத்தியில் பாதிக்காமல், நேர்மையாகப் பணியாற்ற வேண்டும் என ஆய்வுக் கூட்டத்தில் அறிவுரைகள் வழங்கியதாக கூறப்படுகிறது.