BREAKING NEWS

திருநெல்வேலி மாவட்ட துப்பறியும் மோப்ப நாய் பிரிவில் புதிதாக பயிற்சி அளிக்கப்பட்ட மோப்பநாய்(Jack) சேர்ப்பு.

திருநெல்வேலி மாவட்ட துப்பறியும் மோப்ப நாய் பிரிவில் புதிதாக பயிற்சி அளிக்கப்பட்ட மோப்பநாய்(Jack) சேர்ப்பு.

திருநெல்வேலி மாவட்ட துப்பறியும் மோப்ப நாய் பிரிவிற்கு கடந்த 2020- ம் ஆண்டு வெடிபொருட்கள் கண்டறியும் அலுவலுக்காக புதியதாக துப்பறியும் மோப்ப நாய் குட்டி வாங்கப்பட்டது. இதற்கு Jack என்று பெயர் சூட்டப்பட்டது. மேற்படி மோப்ப நாய் குட்டிக்கு கடந்த ஆறு மாத காலம் கோவை மாவட்டம் துப்பறியும் மோப்ப நாய் பயிற்சி பள்ளியில் பயிற்சி அளிக்கப்பட்டது. அங்கு சிறந்த முறையில் பயிற்சி அளிக்கப்பட்டு பயிற்சி முடிந்து இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் முன்னிலையில் திருநெல்வேலி மாவட்ட துப்பறியும் மோப்ப நாய் பிரிவிற்கு வெடிபொருட்கள் கண்டறியும் அலுவலுக்காக இணைக்கப்பட்டது.

மேலும் மோப்ப நாய் Jack- யை நல்ல முறையில் பயிற்சி அளிக்கவும், பராமரிக்கவும் பயிற்சியாளர்களுக்கு அறிவுரை வழங்கினார். திருநெல்வேலி மாவட்டம் மோப்ப நாய் பிரிவில் இதுவரை குற்ற வழக்கிற்கு இரண்டு மோப்ப நாய்களும், வெடிபொருட்கள் கண்டறியும் அலுவலுக்காக புதிதாக பயிற்சி பெற்ற மோப்ப நாய் Jack-யை சேர்த்து 2 மோப்ப நாய்கள் உட்பட நான்கு மோப்ப நாய்கள் உள்ளன.

இந்நிகழ்ச்சியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மாரிராஜன், உதவி ஆய்வாளர் கருப்பசாமி மற்றும் பயிற்சியாளர்களான முதல்நிலை காவலர் மகேஷ், காவலர் சந்தானம் ஆகியோர் உடனிருந்தனர்.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )