BREAKING NEWS

திருவள்ளூரில் உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி ரோட்டரி சங்கம் மூலம் சுயதொழில் உபகரணங்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

திருவள்ளூரில் உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி ரோட்டரி சங்கம் மூலம் சுயதொழில் உபகரணங்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் ஷெல்டர் டிரஸ்ட் மற்றும் ரோட்டரி சங்கம் மூலம் ரூபாய் ஒன்பது லட்சம் மதிப்பு தானே சுயதொழில் உபகரணங்களை மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் வழங்கினார்.

 

ஆண்டுதோறும் டிசம்பர் 1ஆம் தேதி உலக எய்ட்ஸ தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த தினத்தில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்து அவர்களின் வாழ்வாதாரம் மேம்பாட்டுக்கான உதவிகளை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது.

 

இந்த ஆண்டு உலக எய்ட்ஸ் தினத்தை ஒட்டி திருவள்ளூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்வாதாரம் மேம்படுத்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், மாவட்ட சட்டப் பணிகள் ஆணை குழு செயலாளர் நீதிபதி சாண்டில்யன் ஆகியோர் கலந்து கொண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் வாழ்த்துரை வழங்கினர்.

 

இதை தொடர்ந்து ஷெல்டர் டிரஸ்ட் சார்பில் சுமார் 2.10 லட்சம் மதிப்பீட்டில் ஏற்பாடு செய்யப்பட்ட இலவச தையல் இயந்திரங்கள் 30 பயனாளிகளுக்கும் ரோட்டரி சங்கங்கள் சார்பில் ரூபாய் 2.10 லட்சம் மதிப்பீட்டில் தலா இரண்டு வெள்ளாடுகள் வீதம் 20 பயனாளிகளுக்கும் மற்றும் அவர்களின் நலன் பாதுகாக்கும் வகையில் சத்துக்களை அதிகரிக்கும் உணவுப் பொருட்கள் மரக்கன்றுகளை நாசரேத் மகளிர் கல்வியியல் கல்லூரி சார்பாக மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கிஸ் வழங்கினார்.

 

பின்னர் நடைபெற்ற சமபந்தி போஜன விருந்தில் கலந்து கொண்டு மாவட்ட ஆட்சியர் உணவருந்தினார். இந்நிகழ்ச்சியில் அரச மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் அரசி ஸ்ரீவத்சன், சுகாதாரப் பணிகள் இணை இயக்குனர் செல்வகுமார், துணை இயக்குனர் ஜவஹர்லால், டாக்டர் லட்சுமி முரளி, ஷெல்டர் டிரஸ்ட் நிர்வாகி சாலமன் ராஜா நாசரேத் கல்வியில் கல்லூரி செயலர் ஹென்றி மாரிஸ் முதல்வர் கோல்டன் சீதா என் எஸ் எஸ் அலுவலக காயத்ரி பாலசுப்பிரமணியம் மற்றும் மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலுவலக அதிகாரிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )