திருவாலங்காடு அருகே கொசஸ்தலை ஆற்றில் கண்டெடுக்கப்பட்ட மூன்றரை அடி உயரம் உள்ள கருங்கல்லால் ஆன முருகன் சிலை கண்டெடுப்பு.

திருவள்ளூர் மாவட்டம் திருவலாங்காடு அடுத்த பாகசாலை கிராமத்தில் உள்ள கொசஸ்தலை ஆற்றில் இளைஞர்கள் விளையாடிக் கொண்டிருந்தபோது காலில் ஏதோ இடிபட்டது போல காணப்பட்டது அப்பொழுது அந்த இடத்தில் பள்ளம் தோன்றி பார்த்தபோது சுமார் மூன்று அரை அடி உயரம் கொண்ட கருங்கல்லால் ஆன முருகன் சிலை கிடைத்துள்ளது உடனடியாக அந்த கிராமத்தின் ஊராட்சி மன்ற தலைவருக்கே தகவல் தெரிவிக்கப்பட்டது.
பின்னர் ஊராட்சி மன்ற தலைவர் வட்டாட்சியருக்கு தகவல் தெரிவித்தார் பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த வட்டாட்சியர் மதியழகன் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் முருகன் சிலையை மீட்டு திருத்தணி வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள ஆவண காப்பகத்தில் பத்திரமாக சிலையை ஒப்படைத்தனர்.
CATEGORIES திருவள்ளூர்
TAGS தமிழ்நாடுதிருவள்ளூர்திருவள்ளூர் மாவட்டம்மாவட்ட செய்திகள்மூன்றரை அடி உயரம் உள்ள கருங்கல்லால் ஆன முருகன் சிலை கண்டெடுப்பு.
