BREAKING NEWS

தூக்கில் தொங்கிய நடிகை இவரா?

தூக்கில் தொங்கிய நடிகை இவரா?


கேரள இளம் நடிகை சஹானா அவரது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவரது மரணத்தின் மர்மத்தை போலீசார் விசாரிக்க தொடங்கி உள்ளனர்.

கேரள மாநிலத்தில் மாடலாகவும் நடிகையாகவும் ஜொலித்து வந்தவர் சஹானா. இவர் கேரளாவில் உள்ள காசர்கோடு பகுதியைச் சேர்ந்தவர். இவருக்கு வயது 20. இவர் தனது கணவருடன் கோழிக்கோடு பகுதியில் ஒன்றாக வசித்து வந்தார். சஹானாவுக்கு திருமணமாகி ஒரு வருடம் தான் ஆகிறது என்று கூறப்படுகிறது.

சஹானா தமிழ் திரைப்படம் மற்றும் விளம்பரப் படங்களில் நடித்தது மூலம் பிசியான நடிகையாக இருந்து வந்தார்.

 


இந்நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) சஹானா தனது மர்மமான முறையில் தற்கொலை செய்து கொண்டார். வீட்டில் உள்ள சன்னல் கம்பியில் தூக்கு போட்டு பிணமாக தொங்கினார்.

இது குறித்து தகவல் அறிந்த கேரள போலீசார் சஹானாவின் கணவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். திருமணமாகி ஒரு வருட காலமே ஆவதால் அவர் மீது ஆர்.டி.ஓ. விசாரணையும் மேற்கொள்ளப்பட உள்ளது.

இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், கணவருடன் ஏதேனும் கருத்து வேறுபாடா? அல்லது தொழில் போட்டியா? அல்லது யாரேனும் தற்கொலைக்கு தூண்டினார்களா என்று பல்வேறு கோணங்களில் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.

வளர்ந்து வரும் இளம் நடிகையான சஹானாவின் திடீர் மர்ம மரணத்தால் கேரள திரையுலகமும், அவரது ரசிகர்களும் ஆழ்ந்த சோகத்தில் உள்ளனர்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )