BREAKING NEWS

தூத்துக்குடியில் சிக்னலில் நின்று செல்லும் வாகன ஓட்டிகள் வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பித்துக் கொள்ள தற்காலிக பந்தல் அமைத்து தூத்துக்குடி மாநகராட்சி சிறப்பான ஏற்பாடு

தூத்துக்குடியில் சிக்னலில் நின்று செல்லும் வாகன ஓட்டிகள் வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பித்துக் கொள்ள  தற்காலிக பந்தல் அமைத்து  தூத்துக்குடி மாநகராட்சி சிறப்பான ஏற்பாடு

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் வாகன ஓட்டிகள் சிக்னலில் நிற்கும் ஒரு நிமிடம் சற்று இளைப்பாறவும் வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பித்துக் கொள்ளவும் தூத்துக்குடியில் வாகனங்கள் சிக்னலில் காத்திருக்கும் இடங்களில் பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளது தூத்துக்குடி விவிடி சிக்னலில் உள்ள நான்கு சந்திப்புகளிலும் தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் நிழல் தரும் தற்காலிக துணி பந்தல் அமைத்து வாகன ஓட்டிகளின் வயிற்றில் பாலை வார்த்து உள்ளது இந்த செய்கையானது தூத்துக்குடியில் மக்களிடையே வரவேற்பை் பெற்றுள்ளது

தூத்துக்குடியில் கடந்த சில நாட்களாக அதிக மாக வெயிலின் தாக்கம் உள்ளது கடற்கரை அருகில் இருப்பதால் சற்று கடற்கரை காற்று வீசினாலும் வெப்பம் தாங்க முடியாத அளவு உள்ளது மதியம் 11 மணி முதல் 3 மணி வரை மக்கள் வெளியே வர முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர் இந்த நிலையில் தூத்துக்குடியில் உள்ள vvd சிக்னல்களில் வாகன ஓட்டிகள் வாகன நிறுத்துவதற்கு நிறுத்தும்போது அதிக வெயிலின் காரணமாக மிகவும் வேதனைப்பட்டு வாகனங்களை நிறுத்தி செல்ல முடியாத சூழல் ஏற்பட்டு இருந்தது இதனை கருத்தில் கொண்டு தூத்துக்குடி மாநகராட்சி சார்பாக முக்கிய சிக்னலான விவிடி சிக்னலில் உள்ள நான்கு நிறுத்தங்களிலும் மரக்கம்புகளால் செட்டு போடுவது போல் கம்புகளை மேய்ந்து மேலே வெயில் படும் இடத்தில் ஓட்டைகள் உள்ள தடிவனான துணியால் மேலே பந்தல் அமைத்து வெயிலின் தாக்கம் கீழே வராத அளவுக்கு ஏற்பாடு செய்திருந்தனர் இது வாகன ஓட்டிகள் இடையே தூத்துக்குடியில் மகிழ்ச்சி ஏற்படுத்தி உள்ளது

CATEGORIES
TAGS