தூர்வாரும் பணியை முறையாக தூர்வார வேண்டும் உழவர்பேரியக்க மாநில தலைவர் பேட்டி.
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே தட்டுமால்படுகை பகுதியில் அரசலாறு தூர் வாரும்பணி நடைபெற்று வருகிறது. தூர்வாரும் பணியானது சரிவர நடைபெறவில்லை என கூறப்படுகிறது.
அரசலற்றின் இரு கரைகளையும் முறையாக அகலப்படுத்தி, மேடு பள்ளம் இன்றி தூர் வார வேண்டுமென அரசலாறு படுகை விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று தூர் வாரும் பணி நடைபெற்று வரும் பகுதியில் தமிழ்நாடு உழவர்பேரியக்க மாநில தலைவர் கோ.ஆலயமணி நேரில் பார்வையிட்டார். அப்போது அவர் கூறியதாவது.
பாபநாசம் வட்டம், படுகைபுதுத்தெரு அருகே அரசலாறு தூர்வாரும் பணி நடக்கிறது. தூர் வாரும் பணியில் குளறுபடி நடப்பதாக விவசாயிகள் தரப்பில் தெரிவித்ததன் அடிப்படையில் தூர்வாரும் பகுதிக்கு பொறுப்பாளர்களுடன் சென்று பார்வையிட்ட போது அரசலாறு தூர் வாரும்பணி திருப்தியாக இல்லை, குளறுபடி நடக்கிறது.
மாவட்ட ஆட்சியர் உடனடியாக தலையிட்டு தூர் வாரும் பணியை முறையாக எந்தவித முறைகேடும் இன்றி தூர்வாரிட அறிவுறுத்த வேண்டும், ஆற்றின் இரு கரைகளையும் பலபடுத்தும் வகையில் மண் அணைக்க வேண்டும்,
ஆறு திரும்பும் இடங்களில் பட்டா நிலங்கள் பாதிக்காத வகை பாதுகாப்பு தடுப்பு சுவர் கட்ட வேண்டும், தூர் வாரும் பணியை முறையாக, சரியாக நடைபெற வில்லையென்றால் தமிழ்நாடு உழவர் பேரியக்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்னால் மக்கள் திரள் போராட்டம் நடத்த வேண்டி வரும் என்று தெரிவித்தார்.
உடன் தமிழ்நாடு உழவர் பேரியக்க மாவட்ட செயலாளர் சிங்காரவேல், மாநில செயற்குழு உறுப்பினர் சிஆர்சி ரவீந்திரன், முன்னாள் வன்னியர் சங்க மாவட்ட நிர்வாகி பொன்பேத்தி பழனிச்சாமி, பாபநாசம் நகர செயலாளர் ரவி, முன்னாடி விவசாயிகள் பாலகிருஷ்ணன், உத்திராபதி, முருகேசன், பத்மாவதி, ரவி உள்பட பலர் உடன் இருந்தனர்.