BREAKING NEWS

தேனி மாவட்டம் உத்தம பாளையத்தில் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் பள்ளி பேருந்துகள் ஆய்வு

தமிழக முழுவதும் ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இந்தப் பள்ளி திறப்புக்களின் போது ஆண்டு தோறும் பள்ளிகளில் குழந்தைகளை ஏற்றிச் செல்லக்கூடிய வாகனங்கள் முறையாக உள்ளதா? பாதுகாப்பாக உள்ளதா? என்பது குறித்து வருவாய் துறை அதிகாரிகள், போக்குவரத்து துறை அதிகாரிகள், பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்வது வழக்கம்.

அதன்படி இந்த ஆண்டு பள்ளிகள் திறக்கப்பட உள்ள சூழலில் இன்று உத்தமபாளையம் மற்றும் போடி தாலுகாக்களில் செயல்பட்டு வரக்கூடிய அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் பள்ளி குழந்தைகளை ஏற்றிச் செல்லக்கூடிய வேன்கள், பேருந்துகள் உள்ளிட்டவை பாதுகாப்பாக உள்ளதா? என்பது குறித்தும் இந்த பேருந்துகள் அனைத்தும் தகுதியாக உள்ளதா? என்பது குறித்தும் இன்று உத்தமபாளையம் தனியார் கல்லூரி மைதானத்தில் ஆய்வுக்காக கொண்டு வரப்பட்டது.
இதற்காக போக்குவரத்து துறை சார்பில் பள்ளி வாகனங்களுக்கான சிறப்பு ஆய்வு முகாம் நடத்தப்பட்டது. இந்த ஆய்வு முகாமில் உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் தாட்சாயினி தலைமை வைக்க, உத்தமபாளையம் வட்டார போக்குவரத்து அலுவலர் சுந்தர்ராஜன் மற்றும் பள்ளி கல்வித்துறை அதிகாரிகள், தீயணைப்பு துறை அதிகாரிகள், மருத்துவ துறை சார்ந்தவர்கள் மற்றும் பேருந்து ஓட்டுநர்கள் பள்ளி நிர்வாகத்தினர் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றுந்தனர்.

இன்று நடைபெற்ற இந்த ஆய்வின் போது உத்தமபாளையம் மற்றும் போடி தாலுகாவைச் சார்ந்த சுமார் 300-க்கும் மேற்பட்ட பள்ளி வேன் மற்றும் பேருந்துகள் ஆய்வு செய்யப்பட்டனர்.

Share this…

CATEGORIES
TAGS