BREAKING NEWS

தேனி மாவட்டம் கம்பத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 497 மார்க் எடுத்த மாணவி சாதனை பெற்றோர் ஆசிரியர்கள் வாழ்த்து

தேனி மாவட்டம் கம்பத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 497 மார்க் எடுத்த மாணவி சாதனை பெற்றோர் ஆசிரியர்கள் வாழ்த்து

நடைபெற்று முடிந்த பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தேனி மாவட்டத்தில் 14225 மாணவ மாணவிகள் தேர்வு எழுதினார் அதில் 13177 மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இதில் தேனி மாவட்டம் கம்பம் ராமஜெயம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில்(தனியார் பள்ளி) படித்த விதர்சனா என்ற மாணவி 497 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் முதலிடம் பெற்றுள்ளார்.

இவர் இவர் ஆங்கிலத்தில் 99 தமிழில் 99 கணிதத்தில் 100 அறிவியலில் 100
சமூக அறிவியலில் 99 என மதிப்பெண் பெற்று பள்ளிக்கும் பெற்றோருக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

மாணவி விதர்சனாவின் தாயார் தமிழக காவல்துறையில் கம்பம் பகுதியில் பெண் காவலராக பணியாற்றி வருகிறார்.

வெற்றி பெற்ற மாணவி கூறுகையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக தான் கடியமாக படித்ததாகவும், பொழுதுபோக்கு சமூக வலைதளங்கள் உள்ளிட்டவற்றை தவிர்த்து படிப்பில் மட்டும் கவனம் செலுத்தி படித்ததால் இந்த மதிப்பெண் கிடைத்ததாகவும், இந்த மதிப்பெண் கிடைப்பதற்கு பெற்றோர் மற்றும் ஆசிரிய பெருமக்கள் மிகவும் உதவியதாக அவர் தெரிவித்தார். தனது வெற்றிக்கு காரணம் தனது தாயாரின் கடின உழைப்பு முன்னுதாரணமாக இருந்ததாகவும் தெரிவித்தார்.
மேலும் மாணவ மாணவிகள் இதேபோன்று கடினமாக படித்தால் அதற்கான பலன் கிடைக்கும் எனவும் தெரிவித்தார்.

வெற்றி பெற்ற மாணவிக்கு பள்ளி நிர்வாகத்தினர் மற்றும் பெற்றோர் இனிப்புகள் வழங்கி தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இதேபோன்று தேனி மாவட்டம் கம்பம் ஆங்கூர் ராவுத்தர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயின்ற மாணவி வைஷ்ணவி என்ற மாணவி 495 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். அரசுப் பள்ளியில் பயின்று இந்த மதிப்பெண் பெற்ற மாணவி கூறுகையில் அரசுப் பள்ளியில் தனக்கு ஆசிரிய பெருமக்கள் மிகவும் உதவி புரிந்ததாகவும் கல்வி கற்பதற்கு பல்வேறு வழிமுறைகளையும், கடின உழைப்புகளையும் அவர்கள் வழங்கியதால் தான் இந்த மதிப்பெண் பெற்றதாகவும் பல்வேறு போட்டி சூழல் நிலவும் இந்த காலகட்டத்தில் இந்த வெற்றி பெறுவதற்கு மிகவும் கடினப்பட்டு பயின்றதாக அவர் தெரிவித்தார்.

முதல் மதிப்பெண் மற்றும் இரண்டாம் மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு இனிப்புகளை வழங்கி ஆசிரிய பெருமக்கள் மற்றும் பெற்றோர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

CATEGORIES
TAGS