BREAKING NEWS

தேனி மாவட்டம் டி.புதுக்கோட்டை கிராமத்தில் 20 நாட்களாக தண்ணீர் வராததை கண்டித்து சாலை மறியல் போராட்டம்.

தேனி மாவட்டம் டி.புதுக்கோட்டை கிராமத்தில் 20 நாட்களாக தண்ணீர் வராததை கண்டித்து சாலை மறியல் போராட்டம்.

செய்தியாளர் மு. பிரதீப்

தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் உள்ள சின்னமனூர் ஒன்றியம் பெட்டிபுரம் கிராம ஊராட்சிக்கு உட்பட்ட டி.புதுக்கோட்டை கிராமத்தில் 20 நாட்களாக தண்ணீர் வராததை கண்டித்து அரசு பேருந்தை சிறைபிடித்து சாலை மறியல் போராட்டம்.

 

200க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கற்கள் கயிறுகளை வைத்து அரசுப் பேருந்தை சிறை பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

தேனி மாவட்டம் தேவாரம் அருகே உள்ளது பெட்டிபுரம் கிராம ஊராட்சி . இந்த கிராம ஊராட்சிக்கு உட்பட்ட டி புதுக்கோட்டை கிராமத்தில் கடந்த 20 நாட்களாக குடி தண்ணீர் வரவில்லை என்றும் இது குறித்து பெட்டிபுரம் ஊராட்சி மன்ற தலைவர் சின்னமனூர் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்டவர்கள் பலமுறை புகார் அளித்தும் அலட்சியமாக பதில் சொல்லியதால் இன்று கிராம மக்கள் ஒன்றிணைந்து அரசு பேருந்தை கற்கள் கயிறுகளை வைத்து பேருந்து சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர் .

போடி தாலுகா காவல்துறையினர் பொதுமக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி ஒரு வாரத்திற்குள் தண்ணீர் பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என்ன தெரிவித்தும் பொதுமக்கள் சாலை மறியலில் இருந்து கலந்து செல்லாமல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேல் நடைபெற்ற இந்த போராட்டத்தில் பொதுமக்கள் ஒரு வாரத்திற்குள் தீர்வு கிடைக்க விட்டால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று முற்றுகை செய்வோம் என தெரிவித்து கலைந்து சென்றனர். இதன் காரணமாக சுமார் ஒரு மணி நேரம் டி புதுக்கோட்டை பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )