BREAKING NEWS

தேனி மாவட்டம் லோயர் கேம்பில் ரூபாய் 40 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக சமுதாயக்கூடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா ஆண்டிபட்டி எம்எல்ஏ பங்கேற்பு

தேனி மாவட்டம் லோயர் கேம்பில் ரூபாய் 40 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக சமுதாயக்கூடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா ஆண்டிபட்டி எம்எல்ஏ பங்கேற்பு

தேனி மாவட்டம் கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட 21 வது வார்டு லோயர் கேம்பில் அம்பேத்கர் காலனியில் புதிதாக சமுதாயக்கூடம் கட்டுவதற்கு இன்று அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

பொது மக்களின் பயன்பாட்டிற்காக கட்டப்படும் இந்த சமுதாய கூடம் கட்டுவதற்கு முதலமைச்சர் நீதி திட்டத்தின் கீழ் ரூபாய் 40 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதனை அடுத்து இன்று நடைபெற்ற பூமி பூஜை விழாவில் ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன், கூடலூர் நகர மன்ற தலைவர் பத்மாவதி லோகதுரை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.மேலும் கூடலூர் நகராட்சி அரசுத்துறை அதிகாரிகளும், அப்பகுதி பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து விரிவாக இந்த சமுதாயக்கூடம் கட்டி முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விரைவில் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

CATEGORIES
TAGS