BREAKING NEWS

தொடர் மின்வெட்டு குறித்து புகார் அளிக்க மின்சார அலுவலகத்திற்கு எப்போ வந்தாலும் அதிகாரிகள் இல்லை என பதிலால் வெறுத்துப் போன ஹரிச்சந்திராபுரம் பொதுமக்கள்..

தொடர் மின்வெட்டு குறித்து புகார் அளிக்க மின்சார அலுவலகத்திற்கு எப்போ வந்தாலும் அதிகாரிகள் இல்லை என பதிலால் வெறுத்துப் போன ஹரிச்சந்திராபுரம் பொதுமக்கள்..

தொடர் மின்வெட்டு குறித்து புகார் அளிக்க மின்சார அலுவலகத்திற்கு எப்போ வந்தாலும் அதிகாரிகள் இல்லை என பதிலால் வெறுத்துப் போன ஹரிச்சந்திராபுரம் பொதுமக்கள் உதவி மின் பொறியாளர் அலுவலகத்தை முற்றுகைப் போராட்டம்

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த ஹரிச்சந்திராபுரம் பகுதியில் கடந்த 40 வருடங்களுக்கு முன்னர் அமைக்கப்பட்ட மின் கம்பங்கள் மற்றும் மின்வாயர்கள் சேதமடைந்து அவ்வப்போது மின்தடை ஏற்பட்டு வருவதாகவும்
மேலும் கடந்த மூன்று நாட்களாக குறைந்த மின் அழுத்தம் காரணமாக அப்பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி அரக்கோணம் தெற்கு உதவி மின் பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

அப்போது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இல்லை என பதில் கூறியதால் வெறுத்துப்போன அரிச்சந்திராபுரம் பகுதி மக்கள் கடந்த 9 மாதங்களாக புகார் அளிக்க எப்ப வந்தாலும் அதிகாரிகள் இல்லை என்ற பதில் மட்டுமே வருவதாக குற்றம் சாட்டினார்.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வரும் வரை அலுவலகத்தை விட்டு செல்ல மாட்டோம் எனக் கூறியதை அடுத்து சிறிது நேரத்தில் அங்கு வந்த இளநிலை பொறியாளர் கார்த்திக் இதன் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு முதற்கட்டமாக குறைந்த மின்னழுத்தம் சீர் செய்யப்படும் என்றும் அதேபோல் சேதமடைந்த மின் கம்பங்கள் மற்றும் மின் ஒயர்கள் விரைவில் சீர் செய்யப்படும் என உறுதியளித்ததை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்…இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

CATEGORIES
TAGS