நாகர்கோவிலில் தூய்மை பணியாளர்களுக்கு ஓராண்டாக எவ்வித உபகரணங்களும் வழங்கவில்லை: தமிழக முதல்வருக்கு ஆதித்தமிழர் கட்சி புகார் மனு!
தமிழக முதல்வருக்கு அனுப்பிய மனுவில் குறிப்பிட்டு இருப்பதாவது:
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் மாநகராட்சியில் சதர்ன் வெஸ் மேனேஜ்மென்ட் நிறுவனத்தில் சக 750 ஆண்.பெண் தூய்மை பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த தொழிலாளர்களுக்கு தினக்கூலியில் இருந்து பாதுகாப்பு உபகரணங்கள். வழங்குவதற்கும். பி.எஃப் நிதி. மருத்துவ காப்புறுதி நிதி பிடித்தம் செய்யப்பட்டு வருகின்றன.
தற்போது நாகர்கோவில் மாநகராட்சியில் ஒப்பந்தம் செய்யப்பட்டு கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகிறது. இதுவரை எந்தவொரு பாதுகாப்பு உபாரணங்களும் வழங்கவில்லை. கிட்டத்தட்ட தினக்கூலியில் இருந்து பிடித்தம் செய்யப்பட்ட பி.எஃப்.நிதி மருத்துவ காப்புறுதி தொகை கிட்டத்தட்ட 6 மாதமாக பி.எஃப் நிதி நிறுவனத்தில் செலுத்தவில்லை. மருத்துவ காப்புறுதி நிதியையும் செலுத்தவில்லை.
ஆக தனியர் ஒப்பந்த துய்மை பணியாளர்கள் பணத்தை முறைகேடு செய்யப்பட்டு வருகின்றன. ஒப்பந்தத்தில் பதிவு செய்துள்ளபடி தூய்மை பணியாளருக்கு வழங்கவேண்டிய பாதுகாப்பு உபரணங்கள் . வருடத்தில், இரண்டு செட் சீருடைகள், மழைகோட் காலணிகள், தலைக்கவசம்,
தளவாடபொருள்கள் உள்பட அனைத்தும் ஒரு வருடம் ஆகிறது. இதுவரை வழங்கவில்லை. ஆகவே தூய்மை பணியாளர்கள் நலன்கருதி தாங்கள் சதர்ன் வேஸ்ட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க ஆதித்தமிழர் கட்சியின் சார்பாக வேண்டிக் கொள்கிறேன்.
இவ்வாறு கி.குமரேசன், மாவட்டசெயலாளர்,ஆதித்தமிழர்கட்சி,கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த வர் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.