நாளை ஒரு நாள் நீதிமன்ற புறக்கணிப்பு செய்யவும் முடிவு..

வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக தமிழக அரசு அவசர சட்டமாக நிறைவேற்ற வேண்டும் தூத்துக்குடியில் வழக்கறிஞர்கள் தூத்துக்குடி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு ஆர்ப்பாட்டம்…
வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தை தமிழக அரசு உடனடியாக அமல்படுத்த வலியுறுத்தியும், சென்னை வழக்கறிஞர் கௌதமன் அவர்களின் படுகொலை சம்பவத்தை கண்டித்தும் இன்று மதியம் 20.06.2024 வியாழக்கிழமை தூத்துக்குடி மாவட்ட ஒருங்கிணைந்தநீதிமன்றம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர் ஆர்ப்பாட்டத்தில் தூத்துக்குடி வழக்கறிஞர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள் நிர்வாகிகள் கலந்து கொண்டனர் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் முடிவின்படி 21.06.2024 வெள்ளிக்கிழமை நாளை ஒருநாள் மட்டும் வழக்கறிஞர்கள் நீதிமன்ற பணிகளை புறக்கணிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.