BREAKING NEWS

நீலகிரி மாவட்டம் மசினகுடி அருகே உள்ள ஆச்சக்கரை வனப்பகுதியில் ஏற்பட்ட பயங்கர காட்டுத் தீ…

நீலகிரி மாவட்டம் மசினகுடி அருகே உள்ள ஆச்சக்கரை வனப்பகுதியில் ஏற்பட்ட பயங்கர காட்டுத் தீ…

வனப்பகுதி முழுவதும் கொழுந்து விட்டு எரியும் தீயினால் சுமார் பத்து ஏக்கர் பரப்பளவில் வனப்பகுதி எரிந்து நாசம்…
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் காட்டுத்தீயை கட்டுப்படுத்தும் பணியில் தற்போது ஈடுபட்டுள்ளனர்…

நீலகிரி மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு நிலவி வந்த கடும் உரை பணி பொலிவு மற்றும் பகல் நேரங்களில் நிலவும் வெயிலின் காரணமாக வனப்பகுதிகளில் உள்ள செடி, கொடிகள் முழுவதும் கருகி கடும் வறட்சி நிலவி வருகிறது.

குறிப்பாக பகல் நேரங்களில் நிலவி வரும் கடும் வெயில் மற்றும் காற்றின் காரணமாக கூடலூர்,மசினகுடி, உதகை, குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அமைந்துள்ள வனப் பகுதிகளில் அவ்வப்போது காட்டுத் தீ ஏற்பட்டு வருகின்றது.இதனை தொடர்ந்து தற்போது மசினகுடி அருகே உள்ள ஆச்சக்கரை பகுதியில் உள்ள வனப்பகுதியில் திடீர் காட்டுத் தீ ஏற்ப்பட்டு உள்ளது.

மேலும் வனப்பகுதியில் ஏற்ப்பட்டுள்ள காட்டுத்தீயானது அருகே இருந்த தனியார் விடுதி வளாகத்திலும் பரவி அங்கு உள்ள மரத்தினால் அமைக்கப்பட்டுள்ள குடிலிளும் பரவி தீயானது பற்றி எரிந்து வருகிறது.நல்வாய்ப்பாக அங்கு யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்ட சூழலில்,
இவற்றை கட்டுப்படுத்தும் பணியில் வனத்துறையினர், தீயணைப்பு துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

திடீரென ஏற்பட்ட காட்டு தீ காற்றின் காரணமாக வனப்பகுதியில் பரவலாக பரவி தீ பற்றி எரிய தொடங்கியதால் யூகலிப்டஸ், காட்டு மரங்கள் மற்றும் மூலிகை தாவரங்கள் என செடி, கொடிகள் முற்றிலும் தீக்கு இரையாகின.

தற்போது முதுமலை புலிகள் காப்பக வெளிமண்டல பகுதி என்பதால் வனப்பகுதியில் ஏற்ப்பட்டுள்ள காட்டுத் தீ காரணமாக வனவிலங்குகள் இடம் விட்டு இடம் பெயர வேண்டிய நிலையும் ஏற்ப்பட்டு உள்ளது.
தொடர்ந்து.
இதனையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், தீயணைப்பு துறையினர் உதவியுடன் காட்டுத்தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

CATEGORIES
TAGS