பசுபதிகோயில் புனித அந்தோணியார் திருத்தலம் தேர் பவனி திருவிழா ஏராளாமானோர் பங்கேற்பு.
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, பசுபதிகோயில் புனித அந்தோணியார் திருத்தலம் மின் அலங்கார தேர்பவனி தேர்விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.திருவிழாவை முன்னிட்டு கும்பகோணம் மறை மாவட்ட ஆயர் ஜீவானந்தம் முன்னிலையில் கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது திருவிழாவின் முக்கிய நிகழ்வாக மின் அலங்கார தேர் பவனி நடைபெற்றது. திருவிழாவை முன்னிட்டு குடந்தை ஆயர் அந்தோணி சாமி தலைமையில்.புனித அந்தோனியார் ஆலயம் பங்கு தந்தை ராஜசேகர். அருள்பணியாளர்கள் செபாஸ்டின், சூசை தேவனேசன், காணியிருப்பு பங்கு அருட்பணியாளர் ஜோசப் ஆகியோர் முன்னிலையில் கூட்டு பிரார்த்தனை திருப்பலி நடைபெற்றது.
திருப்பலியில் கிராம மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு அனைவரும் நோய் நொடியின்றி சகல நன்மைகளும் கிடைக்க புனித அந்தோனியாரை கூட்டு பிரார்த்தனை செய்து கொண்டனர். அதனை தொடர்ந்து புனித அந்தோனியார் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் பேண்ட் வாத்திய இன்னிசையுடனும், வான வேடிக்கையுடன் மின் அலங்கார தேரில் முக்கிய வீதிகள் வழியாக தேர்பவனி நடைபெற்றது. இதில் கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.