BREAKING NEWS

பணத்தில் ரசாயனம் தடவி கொடுத்த லஞ்சம்; கையும் களவுமாக பிடிப்பட்ட கிராம நிர்வாக அலுவலர்

பணத்தில் ரசாயனம் தடவி கொடுத்த லஞ்சம்; கையும் களவுமாக பிடிப்பட்ட கிராம நிர்வாக அலுவலர்

செய்தி ஆசிரியர் – வாசுதேவன்.

வேலூரில் பட்டா மாற்றுதலுக்காக லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கையும் களவுமாக கைது செய்த வேலூர் லஞ்ச ஒழிப்பு துறையினர்

பணத்தில் ரசாயனம் தடவி கிராம நிர்வாக அலுவலரிடம் வழங்கும்போது கையும் களவுமாக பிடிப்பட்ட கிராம நிர்வாக அலுவலர்

வேலூர் மாவட்டம், வேலூர் அடுத்த அலமேலு ரங்காபுரம் பகுதியை சேர்ந்த சரஸ்வதி பட்டா மாற்றத்திற்காக கிராம நிர்வாக அலுவலர் சர்மிளா இடம் சென்றுள்ளார்.

பட்டா மாறுதலுக்கு நீங்கள் ஐந்தாயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என கிராம நிர்வாக அலுவலர் சர்மிளா கேட்டதாகவும்
சரஸ்வதி வேலூர் லஞ்ச ஒழிப்பு துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.

வேலூர் லஞ்ச ஒழிப்புத் துறையினர் புகாரைப் பெற்று ஐந்தாயிரம் பணத்தில் ரசாயனம் தடவி சரஸ்வதியிடம் கொடுத்துள்ளனர்.

அந்த தொகையை கிராம நிர்வாக அலுவலர் சர்மிளாவிடம் கொடுக்கும் போது

வேலூர் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் மறைந்திருந்து கையும் களவுமாக பிடித்தனர்.

மேலும் பட்டா மாற்றத்திற்கு ஐந்தாயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் இடம் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

CATEGORIES
TAGS