பண்ருட்டியில் இந்து மக்கள் கட்சி சார்பில் கவன ஈர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி பேருந்து நிலையம் அருகில் இந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் தேவா தலைமையில் கவன ஈர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வடலூர் வள்ளலார் சத்திய ஞான சபையில் வள்ளலார் பன்னாட்டு மையம் அமைப்பதை கைவிட்டு, அவர் பிறந்த ஊரான மருதூர், தண்ணீரில் விளக்கு ஏற்றிய கருங்குழி, சித்திபெற்ற மேட்டுக்குப்பம், நெய்வேலி என்எல்சி நிர்வாகத்தால் நிலக்கரி சுரங்கம் மூடப்பட்ட இடம் அல்லது கடலூர் விருத்தாசலம் சாலை, கும்பகோணம் பண்ருட்டி சாலையில் ஏதேனும் ஒரு இடத்தை தேர்வு செய்து
பன்னாட்டு மையத்தை அமைக்க வேண்டும் என்று தமிழக அரசையும் இந்து சமய அறநிலைத்துறையும் கண்டித்து இந்து மக்கள் கட்சி சார்பில் கண்டனம் கோஷங்களை எழுப்பினர்.இதில் இந்து மக்கள் கட்சி மாநில ஆன்மீக பேரவை செயலாளர் மைலம் சக்திவேல் மற்றும் ஏராளமான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.
CATEGORIES கடலூர்
TAGS கடலூர் மாவட்டம்கடலூர் மாவட்டம் பண்ருட்டி பேருந்து நிலையம் அருகில் இந்து மக்கள்தமிழ்நாடுமாவட்ட செய்திகள்