பள்ளி கல்வி கட்டணம் கட்டாததை காரணமாக கூறி மாணவர்களுக்கு கல்வி சான்றிதழ் வழங்குவதை நிறுத்த கூடாது என தனியார் பள்ளிகளுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வேண்டுகோள் விடுத்துள்ளார்
பள்ளி கல்வி கட்டணம் கட்டாததை காரணமாக கூறி மாணவர்களுக்கு கல்வி சான்றிதழ் வழங்குவதை நிறுத்த கூடாது என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பள்ளி கல்வி கட்டணம் கட்டாததை காரணமாக கூறி மாணவர்களுக்கு கல்வி சான்றிதழ் வழங்குவதை நிறுத்த கூடாது என தனியார் பள்ளிகளுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தஞ்சை மாவட்டம் தாரமங்கலத்தில் ஊராட்சி மன்ற அலுவலகத்தை தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தமிழகத்தில் தனியார் பள்ளி உள்ளிட்ட எந்த பள்ளியும் கல்வி கட்டணம் கட்டினால் தான் உள்ளே விடுவேன் என பள்ளி நிர்வாகம் மாணவர்களை தடுக்கக் கூடாது என ஏற்கனவே அறிவுறுத்தி உள்ளோம்.
சேலத்தில் பள்ளி கட்டணம் கட்டாததால் மாணவி ஒருவரை வளாகத்தில் உட்கார வைத்ததை புகைப்படமாக அனுப்பி புகார் தெரிவித்தபோது அந்த பள்ளி நிர்வாகத்தின் மீது விளக்கம் கேட்கப்பட்டது என தெரிவித்த அமைச்சர் கல்விக்கட்டணம் காரணம் காட்டி டிசி வழங்குவதை நிறுத்த கூடாது.
மாணவர்கள் பள்ளிக்கு வருவதை நிறுத்த கூடாது என எச்சரிக்கையாக இல்லாமல் வேண்டுகோளாக கேட்டுக் கொள்வதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.