பழனியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திண்டுக்கல் வேட்பாளர் சசிதானந்தத்தை ஆதரித்து நடிகை ரோகிணி தமிழ் மற்றும் தெலுங்கில் பேசி பிரச்சாரம் மேற்கொண்டார்.

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இந்தியா கூட்டணியின் திமுக தலைமையிலான திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சச்சிதானந்தை ஆதரித்து சினிமா நடிகை ரோகினி பிரச்சாரம் மேற்கொண்டார்.
இதில் இவர் பாலசமுத்திரம், நெய்க்காரப்பட்டி, பழனி நகரம் மற்றும் ஆயக்குடி போன்ற பகுதிகளில் வாகன பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அப்பொழுது பேசிய அவர், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக செயல்பட்ட அதிமுகவின் கூட்டணியில் இருந்து கொண்டு எஸ் டி பி ஐ சிறுபான்மையினருக்கு துரோகம் செய்கிறது.
அதேபோல் பாஜக கேஸ் விலையை தானே உயர்த்துகிறது, மீண்டும் தானே குறைத்துக் கொள்கிறது. இது சினிமாவில் வரும் காட்சியைப் போல
” வெடிகுண்டை இவர்களே வைப்பார்கள் , இவர்களே கண்டுபிடிப்பார்கள் என நடிகர் ரகுவரன் கூறுவதைப் போல் நாடகம் ஆடிக் கொண்டிருக்கிறது” என நகைச்சுவையுடன் பேசினார்.
தொடர்ந்து சத்யா நகர் பகுதியில் பேசிய அவர் அங்குள்ள மக்களிடம் தெலுங்கில் பேசி வாக்கு சேகரித்தார்.