பாரதிய ஜனதா கட்சி மாநில செயலாளர் அஸ்வத்தாமன் கைது.
தமிழக பாரதிய ஜனதா கட்சி கடலூர் கிழக்கு மாவட்ட சார்பாக கடலூர் புதுப்பாளையம் இந்து அறநிலைத்துறை அலுவலகம் எதிரில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட மாநில செயலாளர் அஸ்வத்தாமன் கைது செய்யப்பட்டார். அவருடன் கடலூர் கிழக்கு மாவட்ட தலைவர் கோவிலா நூர் மணிகண்டன், ஆன்மீக பிரிவு மாவட்ட தலைவர் எஸ் .பிரபு , கடலூர் மாநகர தலைவர் வேலு வெங்கடேசன் உள்பட பாரதிய ஜனதா கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.
இந்து சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்ட தமிழக இந்த அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவை பதவி விலக கோரி இந்த மாபெரும் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இந்த முற்றுகைப் போராட்டத்தில் பொதுச் செயலாளர் ஜீவா வினோத்குமார், சுரேஷ், அக்னி கிருஷ்ணமூர்த்தி, ஓபி சி மாநில செயலாளர் இரா. அரங்கநாதன்,மாவட்ட பொருளாளர் மேகநாதன், ஊடகபிரிவு மாநில செயலாளர் ஸ்ரீதர், கடலூர் மாநகர தலைவர்கள் வேலு வெங்கடேசன், ஜே.டி மூர்த்திமாவட்டத் துணைத் தலைவர் பத்மினி, மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி, மகளிர் அணி துணைத்தலைவர் விஜயலட்சுமி, மகளிர் அணி மாவட்ட தலைவர் ஜெயா தசரதன், விளையாட்டு மேம்பாட்டு துறை மாவட்ட தலைவர் பிரவீன் குமார், மற்றும் பாரதிய ஜனதா மாநில மாவட்ட மாநகரமண்டல ஒன்றிய பல்வேறு அணிகளை சார்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். காவல்துறையினர் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகளை கைது செய்து மஞ்சக்குப்பம் திருமண மண்டபத்தில் வைத்துள்ளனர். இந்த முற்றுகைப் போராட்டத்தினால் புதுப்பாளையம் பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.