BREAKING NEWS

பிரபல நடன இயக்குநர் மாரடைப்பால் உயிரிழப்பு!! சோகத்தில் திரையுலகம்!!

பிரபல நடன இயக்குநர் மாரடைப்பால் உயிரிழப்பு!! சோகத்தில் திரையுலகம்!!

டினா

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடன இயக்குனர் டினா சிது. இவர் சமீபத்தில் கோவா சென்றிருந்தார். இந்நிலையில் அங்கு திடீரென உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடன இயக்குனர் டினாவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆனால் எதனால்  மரணம் அடைந்தார் என்பதற்கான காரணம் இன்னும் அதிகாரபூர்வமாக வெளியிடப்படவில்லை.நடன இயக்குனர் டினா மரணத்திற்கு நடன இயக்குனர்கள் மற்றும் திரை நட்சத்திரங்கள் தமது இரங்கல்களை பதிவு செய்து வருகின்றன.

அவரது ரசிகர்கள், பிரபலங்களின் பதிவு  சமூக வலைதளங்களில் குவிந்து வருகின்றன. நடன இயக்குநர் டினாவின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரான சந்தீப், தனது சமூக வலைத்தளத்தில் டீனாவுடன் இருந்த புகைப்படங்களை பதிவு செய்து தனது இரங்கலை தெரிவித்துள்ளார். மேலும் அதில் டீனா இறந்த செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்திருப்பதாக தெரிவித்துள்ளார். மிகச் சிறந்த நடன இயக்குநரை திரையுலகம் தொலைத்து விட்டது எனப் பதிவிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )