BREAKING NEWS

பெரியகுளத்தில் உள்ள பெருமாள் கோவிலில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் சாமி தரிசனம்

2024 மக்களவைத் தேர்தல் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து ஆதரவாளர்களை திரட்டி வாக்கு சேகரிப்பில் ஈடுபட தொடங்கியுள்ளனர். இந்நிலையில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டு கட்சிக்கொடி மற்றும் கட்சி பெயர் பயன்படுத்தக்கூடாது என்ற நிலையில், தற்போது பாஜக கூட்டணியில் சுயேட்சையாக இராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட பாஜக தலைமையிடம் பேசி முடிவெடுக்கப்பட்டு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டது..

இதனிடையே ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த ஊரான பெரியகுளதத்தில் உள்ள இல்லத்திற்கு வருகை தந்த அவர் இன்று பெரியகுளத்தில் உள்ள வரதராஜர் பெருமாள் திருக்கோவிலுக்கு ஆதரவாளர்களுடன் வந்த ஒ.பன்னீர்செல்வம் சிறப்பு பூஜையில் ஈடுபட்டு வழிபாடு மேற்கொண்டுள்ளார்.

CATEGORIES
TAGS