பேரணாம்பட்டு தாலுக்காவில் நடைபெறும் தில்லு முல்லு வேலைகள்: கண்டுகொள்ளாத தாசில்தார் விநாயக மூர்த்தி

பேரணாம்பட்டு, பேரணாம்பட்டு தாலுக்காவில் ஏகப்பட்ட தில்லு முல்லு வேலைகள் நடைபெற்று வருவதாக பேரணாம்பட்டு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
குறிப்பாக பேரணாம்பட்டு டவுன் வருவாய் ஆய்வாளர் கீதா மணல் கடத்தும் நபர்களிடம் சென்று எனக்கு மாமூல் கொடுத்து விடுங்கள். உங்களை விட்டு விடுகிறேன் என்றும், மாமூல் கொடுக்கத் தவறினால் உங்களை மணல் கடத்தியதாக கூறி உங்கள் வாகனங்களை பறிமுதல் செய்து உங்களையும் சிறையில் தள்ளுவேன் என்று மிரட்டுவதாகவும் அதிர்ச்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.
இப்படி மிரட்டுவதால் நிலைக் குலைந்து போன, பேரணாம்பட்டு ஜெ. ஜெ. நகரைச் சேர்ந்த சுதாகர் என்பவர், முதலமைச்சரின் தனிப் பிரிவிற்கு மணல் கடத்த ஈடுபடாத என்னை, பேரணாம்பட்டு டவுன் வருவாய் ஆய்வாளர் கீதா என்னை லஞ்சம் கேட்டு மிரட்டுவதாகவும், வருவாய் ஆய்வாளர் கீதா மீது துறை ரீதியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்று புகார் மனுவை அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் டவுன் வருவாய் ஆய்வாளர் கீதா முதியோர் உதவித் தொகை வழங்க தகுதியில்லாத பயனாளிகளிடம் எல்லாம் தலா 5000 ரூபாய் முதல் 6000 ரூபாய் லஞ்சம் வாங்கி முதியோர் உதவித் தொகைகளை வழங்கி, தமிழக அரசின் பணத்தை லஞ்சக் கணக்கில் ஏப்பமிட்டு வருவதாகவும் தெரிகிறது. மணல் கடத்தல் காரர்களுக்கு எந்த நேரத்தில் மணல் கடத்த வேண்டுமென்றும், எப்படி மணல் கடத்த வேண்டுமென்றும், மணல் கடத்தல்காரர்களுக்கு ஆலோசனைகளை வழங்கி அதிக அளவில் லஞ்சம் பெறுவதாகவும் கூறப்படுகிறது.
இதற்காக தனக்கு கீழ் பணிபுரியும் கிராம நிர்வாக அலுவலர்களான கோவிந்தஸ்ரீ, வடிவேலு, அருண்குமார், அன்பரசன், தனசேகரன் ஆகியோர் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு முதியோர் உதவித்தொகை வழங்குவதில் ஏகப்பட்ட தில்லு முல்லு வேலைகளை, பேரணாம்பட்டு டவுன் வருவாய் ஆய்வாளர் கீதா செய்து வருவதாகவும் தெரிய வந்துள்ளது. ஒரு சில சந்தர்ப்பங்களில் மணல் கடத்தும் நபர்களின் தோள் மீது தனது கைகளை போட்டு சகஜமாகப் பேசுவதாகவும் கூறப்படுகிறது.
மேலும் மேல்பட்டி உள்வட்ட வருவாய் ஆய்வாளர் சற்குணமும், பேரணாம்பட்டு டவுன் வருவாய் ஆய்வாளர் கீதா போல தனக்கு கீழ் பணிபுரியும் கிராம நிர்வாக அலுவலர்களான சிவப்பிரகாசம், மேகநாதன், நவீன்குமார், சௌந்தரி, ஜெயக்குமார், யோகநாதன், நியோ ரோலக்ஸ், பார்த்திபன் ஆகியோர்களை தனது வசப்படுத்திக் கொண்டு முதியோர் உதவித் தொகை வழங்குவதில் பல்வேறு முறைக் கேடுகளை மேல்பட்டி வருவாய் ஆய்வாளர் சற்குணம் செய்து வருவதாகவும், எல்லாவற்றுக்கும் மேலாக மேல்பட்டி வருவாய் ஆய்வாளர் சற்குணம் தினமும் நண்பகல்12 மணி,1 மணிக்கு வேலைக்கு வருவதாகவும் பொதுமக்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் இவரது வருகைக்காக காத்திருந்த வருவாய் ஆய்வாளர் சற்குணம் வருகை தராததால் ஏமாந்தவாறு திரும்பி சென்று விடுவதாகவும் இப்பகுதி மக்கள் தரப்பில் கூறப்படுகிறது. எனவே இதுகுறித்து வேலூர் மாவட்ட கலெக்டர் சுப்பு லட்சுமியும், வேலூர் மாவட்ட வருவாய் அலுவலர் மாலதியும், குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் சுப லட்சுமியும் நேரில் ஆய்வு செய்தால் உண்மையான விஷயம் தெரியவரும்.
இந்நிலையில் தவறு செய்யும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பேரணாம்பட்டு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக உள்ளது. பேரணாம்பட்டு தாலுக்காவில் இவ்வளவு தில்லு முல்லு வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதையெல்லாம் கண்டு கொள்ளாமல் தாசில்தார் விநாயகமூர்த்தியும், மண்டல துணை தாசில்தார் சங்கரும், துணை தாசில்தார் பலராமனும் எதோ வேலைக்கு வந்தோம், 5000,10,000 என்று லஞ்சம் வாங்கினோம், வீடு போய் சேர்ந்தோம் என்ற கணக்கில் செயல்பட்டு வருவதாகவும் பொது மக்கள் தரப்பில் கூறப்படுகிறது.
இந்த மூவரும் இந்திய நாட்டிற்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்று நினைத்தால் விருப்ப ஓய்வு பெற்றுக் கொண்டு தங்களது வீட்டிற்குச் சென்று விடுவதே, இந்த இந்திய நாட்டிற்கு அவர்கள் செய்யப் போகும் மிகப் பெரிய தியாகமாகுமென்று பொதுமக்கள் தரப்பில் கூறப்படுகிறது.
