BREAKING NEWS

பேரணாம்பட்டு மசிகம் ஊராட்சியில் சரியாக வேலைக்கு வராத ஊராட்சி செயலாளர் ஆறுமுகம் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?

பேரணாம்பட்டு மசிகம் ஊராட்சியில் சரியாக வேலைக்கு வராத ஊராட்சி செயலாளர் ஆறுமுகம் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?

பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றியம், மசிகம் ஊராட்சியில் ஊராட்சி செயலாளராக இருப்பவர் ஆறுமுகம்.

இவர் என்று ஊராட்சி செயலாளராக பணிக்கு வந்தாரோ அன்றிலிருந்து இன்று வரை சரியாக வேலைக்கு வந்ததேயில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து பல நாளிதழ்களில் செய்தி வெளியாகி இருந்தது.

ஏன் சரியாக வேலைக்கு வருவதில்லை என்று இப்பகுதி மக்கள் கேட்டால் நான் அணைக்கட்டைச் சேர்ந்தவன். என்னால் அங்கிருந்து அடிக்கடி வந்து கொண்டிருக்க முடியுமா? என்று அலட்சியமாக பதில் சொல்லுவதாக தெரியவந்துள்ளது.

மேலும் அப்படியே அத்தி பூத்தார் போல் வேலைக்கு வந்தாலும் 12,1, மணிக்கு வேலைக்கு வருவதாகவும் இப்பகுதி மக்கள் தரப்பில் கூறப்படுகிறது.

இந்த நிலைமை வருட கணக்கில் தொடர்வதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் கூறினாலும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் இப்பகுதி மக்கள் தரப்பில் கூறப்படுகிறது.

பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் இருக்கின்ற ஊராட்சி மன்றங்களில் பல ஊராட்சி செயலாளர்கள் பணியில் இருந்தாலும் வேலைக்கு சரியாக வராமல் , தண்டச் சம்பளம் பெறும் ஒரே ஊராட்சி செயலாளர் ஆறுமுகம் என்று சொன்னால் அது மிகையாகாது.

எனவே ,இனிவரும் காலங்களில் ஏதாவது சரியான நேரத்திற்கு ஊராட்சி செயலாளர் ஆறுமுகம் வேலைக்கு வர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக உள்ளது.

எல்லாவற்றுக்கும் மேலாக இதுபோன்ற தவறுகளை செய்யும் ஊராட்சி செயலாளர் ஆறுமுகத்தின் மீது துறை ரீதியான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

செய்தி ஆசிரியர் ச.வாசுதேவன்

CATEGORIES
TAGS