பேரணாம்பட்டு மசிகம் ஊராட்சியில் பகல் முழுவதும் எரியும் தெரு மின்விளக்குகள்: குறட்டை விடும் ஊராட்சி நிர்வாகம்!
பேரணாம்பட்டு மசிகம் ஊராட்சியில் பகல் முழுவதும் எரியும் தெரு மின்விளக்குகள்: குறட்டை விடும் ஊராட்சி நிர்வாகம்!
வேலூர், ஆக.19-
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றியம், மசிகம் ஊராட்சியில் தெரு மின் விளக்குகள் பகல் முழுவதும் எரிந்து கொண்டுள்ளன. மேலும் அணைக்கட்டைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவர் சரியாக வேலைக்கு வருவதில்லை.
அத்தி பூத்தார் போல் என்றைக்காவது ஒரு நாள் மட்டுமே மசிகம் ஊராட்சிக்கு வருகை தருகிறார். மசிகம் ஊராட்சி ஓணாங் குட்டையில் குடிநீர் எல்லாம் வாரக்கணக்கில் வீணாகி கொண்டு இருக்கிறது. இதை கட்டுப்படுத்தவும், சரி செய்யவும் யாரும் முன் வரவில்லை. இப்படி பணிகள் எல்லாம் குரங்கு கையில் பூமாலை கொடுத்த கதையாக ஒருவரிடம் மாட்டிக் கொண்டு அவர் பங்குக்கு லாட்டரி அடிக்கிறது என்றும் கூறப்படுகிறது. இது பகலில் ஒரு இரவை நினைவுபடுத்தும் விதமாக உள்ளது.
இது குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் சத்தியமூர்த்தி, ஒன்றிய குழு உறுப்பினர் டி. எம். டில்லிராஜா, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மசிகம் எஸ். மாலதி ஆகியோர் இனிவரும் காலங்களிலாவது பகலில் தெருவிளக்குகள் தேவையின்றி எரியாமலும் ,மின் சக்தியை வீணாக்காமல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. தமிழக மின்வாரிய களப்பணியாளர்களும் நடவடிக்கையை அவ்வப்போது எடுக்க முன்வரவேண்டும் என்பதே மின்நுகர்வோரின் ஒட்டுமொத்த ஒற்றை கோரிக்கையாக மாறியுள்ளது.