பேர்ணாம்பட்டு நகராட்சி சார்பில் ரூ.18 5 கோடியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்: இடத்தை ஆய்வு செய்தார் கோட்டாட்சியர்!
பேர்ணாம்பட்டு நகராட்சியில் கால்வாய்களில் வெளியேற்றப்படும் கழிவு நீரை மறு சுழற்சி முறையில் சுத்திகரிப்பு செய்ய எஸ். பி. எம். திட்டத்தின் கீழ் ரூ.18 கோடியே 57லட்சம் மதிப்பீட்டில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. மறு சுழற்சி முறையில் 70 லட்சம் லிட்டர் சுத்திகரிப்பு செய்து ஆறு மற்றும் எரியில் விடப்படும் அல்லது தொழிற்சாலைகள் பயன்பாட்டிற்கு வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
நகராட்சி கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கான இடத்தை பேர்ணாம்பட்டு அருகே சின்னதாமல் செருவு கிராமத்தில் உள்ள அரசு தோப்பு புறம்போக்கு மற்றும் கொத்தப்பல்லி கிராமத்தில் ஓங்குப்பம் ரோடு ஆகிய பகுதிகளில் வருவாய் கோட்டாட்சியர். சுபலட்சுமி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அவருடன் தாசில்தார் விநாயக மூர்த்தி, நகராட்சி துணைத் தலைவர் ஜூபேர் அஹ்மத், நில அளவையர் சரவணன், நகராட்சி பொறியாளர் தங்கராஜ், பணி மேற்பார்வையாளர் தவமணி, வருவாய் ஆய் வாளர் கீதா, கிராம உதவியாளர்கள் கமலபுரம் சுரேஷ்குமார், குப்புசாமி, அறிவழகன், சுபாஷ் சந்திர போஸ், பாஸ்கர், திவ்யா உட்பட மற்றும் பலர் கலந்து கொண்டனர்.