BREAKING NEWS

போதைப்பொருள் வழக்கில் திமுகவில் முக்கிய பொறுப்பில் உள்ளவர்களுக்கு தொடர்பு உள்ளதா? முருகானந்தம் பேட்டி

போதைப்பொருள் வழக்கில் திமுகவில் முக்கிய பொறுப்பில் உள்ளவர்களுக்கு தொடர்பு உள்ளதா என விசாரணையில் தெரியவரும் என பாஜக வேட்பாளர் முருகானந்தம் பேட்டி

தஞ்சாவூரில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் தஞ்சாவூர் பாராளுமன்ற நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது, இக்கூட்டத்தில் பாஜக மாநில பொதுச் செயலாளரும், தஞ்சை தொகுதி பாஜக வேட்பாளருமான முருகானந்தம் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார், பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில், பாரதப் பிரதமர் நரேந்திரமோடி மீது மக்களுக்கு இருக்கின்ற நம்பிக்கை, வரவேற்பு, இந்த பாராளுமன்ற தொகுதியில் வெற்றியை தேடிக் கொடுக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது என்றும் மக்கள் விரோத ஆட்சி, குடும்ப ஆட்சி, ஊழல் ஆட்சி, வாரிசு அரசியல் நடத்தும் கட்சி மற்றும் திமுக கட்சியினர் நடத்தும் போதைப்பொருள், திமுகவில் முக்கிய பொறுப்பில் உள்ளவர்களுக்கு தொடர்பு உள்ளதா என விசாரணையில் தெரியவரும், அது வெளி வரும்போது திமுக மக்களுக்கு எப்பேர்பட்ட துரோகத்தை செய்துள்ளது, நாட்டு மக்களைப் பற்றி கவலைப்படாமல் கோடிக்கணக்கில் வருமானம் வருகிறது என்று சொன்னால் திமுக எதை வேண்டுமானாலும் செய்யும் என்பதற்கு இது உதாரணமாக அமைய போகிறது, இந்தக் கட்சி தமிழ்நாட்டிலேயே இருக்கக் கூடாது என 2024 தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் எடுக்க உள்ளார்கள் என்று கூறினார், இக்கூட்டத்தில் மாவட்டத் தலைவர் ஜெய்சதீஷ், விவசாய பிரிவு மாநில நிர்வாகி வெங்கடேசன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

CATEGORIES
TAGS