போரூரில் சின்னத்திரை நடிகர் பாலாவின் உருவ படத்தை தத்ரூபமாக வரைந்து சிறுவன் ஒருவன்பாலாவை பார்க்க எனக்கு ஆசையாக இருக்கிறது என கூறி வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது..

தனியார் தொலைக்காட்சியில் காமெடி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பிரபலமானவர் கே பி ஒய் பாலா இவர் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று ஏராளமான பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பொது மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.இந்த நிலையில் போரூர் பகுதியைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் சின்னத்திரை பிரபலம் கே பி ஒய் பாலாவின் உருவப்படத்தை வரைந்து பாலாவை பார்க்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.
அந்த விடியோவில் சிறுவன் பேசியதாவது:
ஹாய் பாலா அண்ணா
எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும்
எனக்கு தலையில அடிபட்டதனால நான் ரெண்டு வருஷமா ஸ்கூலுக்கு போல வீட்ல தான் இருக்கேன்
நான் நிறைய ஓவியம் வரைந்து இருக்கிறேன்
எனக்கு உங்கள பாக்கணும்னு ஆசையா இருக்கு என் வீட்டுக்கு வருவீங்களா
என் வீடு போரூரில் உள்ளது எனகூறி பாலாவை பார்க்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார் இந்த வீடியோ சமூக வலைதளத்தில் பரவி வருகிறது..