BREAKING NEWS

மணப்பாறை அடுத்த மரவனூரில் சுமார் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ அரியநாச்சியம்மன் கோயிலில் பால ஸ்தாபனம் நடைபெற்றது.

மணப்பாறை அடுத்த மரவனூரில் சுமார் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த  ஸ்ரீ அரியநாச்சியம்மன் கோயிலில் பால ஸ்தாபனம் நடைபெற்றது.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த மரவனூரில் சுமார் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ அரியநாச்சியம்மன் கோயிலில் ஆலய புணரமைப்பு பணிகள் வெள்ளிக்கிழமை தொடங்கிய நிலையில், ஆலயத்தில் பால ஸ்தாபனம் நடைபெற்றது. ஆலயத்தில் வாஸ்து சாந்தி, கும்ப அலங்காரம், விமானம் மற்றும் மூலவர் கலாகற்சனம் யாகசாலை வந்தடைந்தது.

முதற்கால வேதிகை பூஜை, வேள்வி திரவியாகுதி, பூர்ணாகுதி தீபாராதணை நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து சிவச்சாரியார்கள் குழுவினர் வேதமந்திரங்கள் முழங்க யாக பூஜைகள் தொடங்கி, கணபதி பூஜை, வேதிகை பூஜை, திரவியாகுதி, பூர்ணாகுதி, தீபாராதனை கலையேர்றுதல் நடைபெற்று பால ஸ்தாபனம் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து மஹா தீபாராதனைகள் நடைபெற்று பக்தர்களுக்கு அருள்பிரசாதங்கள் வழங்கப்பட்டது. மூலவர்களாகிய ஸ்ரீ அரியநாச்சியம்மன், ஸ்ரீ முருகன், ஸ்ரீ தாமரைநாச்சியம்மன், ஸ்ரீ பச்சாநாச்சியம்மன், ஸ்ரீ கள்ளியடியான் கருப்பசாமி வழிபாடு பாலாலயம் செய்யப்பட்டது.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை மணப்பாறை ஆய்வாளர் ச.வினோத்குமார், ஊர் நாட்டாண்மை இரா.கபில்தேவ் கவுண்டர் ஆகியோர் செய்திருந்தனர். நிகழ்வில் கோயில் பணியாளர்கள், 18 பட்டிகளை சேர்ந்த ஊர் முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் என பலர் பங்கேற்றனர். ஆலய புணரமைப்பு பணிகள் தொடங்கியுள்ளது.

Share this…

CATEGORIES
TAGS