மதுரை ராணி மங்கம்மாள் வணங்கிய 600 வருடங்களான ஜெயில் காளியின் சிலைகள் அவல நிலை
மதுரை ஆண்ட ராணி மங்கம்மாள் ஐந்து ஏக்கர் பரப்பளவில் அரண்மனையை அமைத்தார் அரண்மனை அமைந்த இடத்துக்கு அருகே ஒரு பகுதி ஜெயிலாக செயல்பட்டு வந்தது அப்பகுதியில் ராணி மங்கம்மாள் காளி கோவில் ஒன்று அமைத்தார் .
பின்னர் ஆங்கிலேயர் ஆட்சி காலத்திலும் தொடர்ந்து ஜெயில் காளி கோவிலில் பூஜைகள் செய்து செயல்பட்டு வந்தது.பிறகு அப்பகுதி காய்கறி மார்க்கெட்டாக செயல்பட்டு வந்தது மார்க்கெட்டில் உள்ள வியாபாரிகள் ஜெயில் காளி கோவிலை பூஜை செய்து தினம் தோறும் வழிபட்டு வந்தனர்.
பின்னர் மதுரையில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்ட பொழுது காய்கறி மார்க்கெட் அகற்றிவிட்டு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வாகன காப்பகத்தை நிறுவினார்கள் பிறகு அந்த கோவிலை இடித்துவிட்டு காளி சிலைகளை அசுத்தமான இடத்தில் வைத்து விட்டார்கள்.
மீண்டும் காளி கோவில் வேண்டும் என்று பகுதியில் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.