மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய குற்றவியல் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி மயிலாடுதுறை மாவட்டத்தில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம், நீதிமன்றத்தில் வழக்காடும் பணிகள் பாதிப்பு

மத்திய அரசு புதிய குற்றவியல் சட்டத்தை அமல்படுத்துகிறது இந்த சட்டத்திற்கு வழக்கறிஞர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி வழக்கறிஞர்கள் ஒரு வார காலம் தொடர் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக இன்று முதல் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். மயிலாடுதுறை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உள்ளிட்ட 8 நீதிமன்றங்கள் இயங்கி வருகின்றன இதேபோல் சீர்காழி நீதிமன்றம் தரங்கம்பாடி நீதிமன்றம் ஆகிய நீதிமன்றங்கள் மயிலாடுதுறை மாவட்டத்தில் அமைந்துள்ள நிலையில் இன்று வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர் இதன் காரணமாக வழக்காடும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது அரசு தரப்பு வழக்கறிஞர்கள் மட்டும் நீதிமன்றத்தில் ஆஜராகி உள்ளனர்.
TAGS MayiladuruaiMayiladuruai districtமயிலாடுதுறைமயிலாடுதுறை நகராட்சிமயிலாடுதுறை நீதிமன்ற வழக்கறிஞர்கள்மயிலாடுதுறை மாவட்டம்