மனிதநேயத்திற்கான அமைதி கட்சி வேட்பாளர் தண்ணீர்பழ சின்னத்திற்கு வாக்குக்கேட்டு தண்ணீர் பழத்தை கைகளில் கஷ்டப்பட்டு தூக்கிக்கொண்டு கடும் வெயிலில் பிரச்சாரம்

தேனி பாராளுமன்ற தொகுதி தேர்தல்களம் சூடு பிடித்துள்ளது இந்நிலையில் வாக்குப்பதிவு நாளான 19 தேதிக்கு இன்னும் 15 நாட்களே உள்ள நிலையில் திமுக அதிமுக அமமுக நாம்தமிழர் உள்ளிட்ட அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் முக்கிய கட்சிகளுக்கு இணையாக புதிய கட்சியான மனிதநேயத்திற்கான அமைதிக் கட்சியின் வேட்பாளர் சர்ச்சில்துரையும் தனது சின்னமான தர்பூசணி பழத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்
இதற்காக தண்ணீர் பழத்தை கைகளில் கஷ்டப்பட்டு தூக்கிக்கொண்டு சென்று அவர் சென்று வாக்கு சேகரித்து வருகிறார்.
மேலும் முறுக்கு போடும் குடிசைத் தொழில் கம்பெனிக்கு சென்று தொழிலாளியுடன் சேர்ந்து
தொழிலாளராக முறுக்குப்போட்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.அதன்பின்பு தேனி மதுரை சாலையில் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு கரும்புச்சாறு விற்பனை செய்யும் தொழிலாளியிடம் சென்று
கரும்பு மெஷினில் தானே கரும்புச்சாறு தயாரித்து வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.
முக்கிய அரசியல் கட்சிக்கு இணையாக புதிய கட்சியின் சுயேட்சை சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளரும்
தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.