BREAKING NEWS

மயிலாடுதுறை மாவட்டத்தில் பரவலாக சாரல் மழை நேற்று பெய்த கனமழையால் 500 ஏக்கரில் பருத்திச் செடியில் காய்கள் உதிர்ந்து சேதம் :-

மயிலாடுதுறை மாவட்டத்தில் பரவலாக சாரல் மழை நேற்று பெய்த கனமழையால் 500 ஏக்கரில் பருத்திச் செடியில் காய்கள் உதிர்ந்து சேதம் :-

மயிலாடுதுறை மாவட்டத்தில் குறுவை மற்றும் சம்பா நெல் ஆகிய இருபோக சாகுபடி நடைபெற்ற பின்பு சுமார் 7000 ஏக்கரில் பருத்தி சாகுபடி கோடை காலத்தில் நடைபெறுவது வழக்கம். குறைந்த அளவு நீரை பயன்படுத்தி விவசாயிகள் பருத்தி சாகுபடிகள் ஈடுபடுவர். நேற்று பெய்த கனமழை காரணமாக பருத்தி செடியில் காய்க்கத் துவங்கிய காய்கள் மற்றும் பூக்கள் உதிர்ந்து விட்டன.

சுமார் 500 ஏக்கரில் பருத்தி செடிகளை தண்ணீர் சூழ்ந்துள்ள நிலையில் காய்கள் மற்றும் பூக்கள் உதிர்ந்ததால் மகசூல் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது சூழ்ந்துள்ள தண்ணீர் இன்னும் இரண்டு தினங்களில் வடியாவிட்டால் செடிகள் முற்றிலும் அழுகி அழிந்து விடும் நிலை ஏற்பட்டுள்ளது தண்ணீர் வடிந்தாலும் தற்போது காய்கள் உதிர்ந்த காரணத்தால் புதிதாக மருந்துகள் மற்றும் உரங்கள் இட்டால் இன்னும் மூன்று வாரம் கழித்து புதிய பூக்கள் வைக்கும்.

பருத்தி சாகுபடியில் ஐந்து முறை பருத்தி எடுக்க முடியும் என்றாலும் முதல் முறை மட்டுமே அதிகமாக மகசூல் கிடைத்து செலவு செய்த தொகையை ஈடுசெய்ய முடியும் தற்போது பெய்த மழை காரணமாக செலவிட்ட தொகையை மீண்டும் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது தமிழக அரசு பாதிப்பு குறித்து கணக்கெடுத்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Share this…

CATEGORIES
TAGS