மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் பகுதி தாலுக்காவாக ஆக்கப்பட்ட பல ஆண்டுகள் ஆகிறது ஆனால் குத்தாலத்தில் இயங்கி வரும் வட்டாட்சியர் அலுவலகம், பொதுமக்களும் மாணவ மாணவிகளும் பல்வேறு குக்கிரமங்களிலிருந்து வருவதற்கு பேருந்து வசதி இல்லாமல் உள்ளது,

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் பகுதி தாலுக்காவாக ஆக்கப்பட்ட பல ஆண்டுகள் ஆகிறது ஆனால் குத்தாலத்தில் இயங்கி வரும் வட்டாட்சியர் அலுவலகம் ,குத்தாலம் வட்டார வளர்ச்சி அலுவலகம், குத்தாலம் அரசு கலைக்கல்லூரி ஆகியவற்றிற்கு பொதுமக்களும் மாணவ மாணவிகளும் குத்தாலம் வட்டார பல்வேறு குக்கிரமங்களிலிருந்து வருவதற்கு பேருந்து வசதி இல்லாமல் உள்ளது.
குறிப்பாக மங்கநல்லூர் கோமல், தேரழுந்தூர் பகுதியில் இருந்து குத்தாலம் வருவதற்கு பேருந்து வசதி இல்லாமல் உள்ளது மேலும் கும்பகோணத்தில் இருந்து குத்தாலம் வழியாக கோமலுக்கு இயங்கி வந்த தடம் எண் 33, இணை பேருந்துகளாக இரண்டு பேருந்துகள் இயங்கி வந்தன,, ஆனால் தற்போது அது ஒன்று மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது இதனால் பொதுமக்களும் மாணவ மாணவிகளும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
அரசு உடனடியாக கவனத்தில் கொண்டு மங்கநல்லூரிலிருந்து கோமல், தேரழுந்தூர் வழியாக குத்தாலத்திற்கு பேருந்தும், தற்பொழுது நிறுத்தப்பட்டுள்ள 33 பேருந்தை மற்றொன்றை இயக்க வேண்டியும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக மயிலாடுதுறை கிளை மேலாளரிடமும் , மற்றும் கிளை மேலாளர் வாயிலாக கும்பகோணம் மேலாண் இயக்குனருக்கும் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாக இன்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இதில் பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் சித்தமல்லி ஆ பழனிச்சாமி, மாநில பொதுக்குழு உறுப்பினர் காசிபாஸ்கரன், மாயூரம் வழக்கறிஞர் சங்க செயலாளர் வழக்கறிஞர் ஜெயபாரி, மாவட்ட இளைஞர் அணி தலைவர் விமல், குத்தாலம் பேரூர் செயலாளர் வழக்கறிஞர் சுரேஷ், மாவட்ட துணை செயலாளர் சபா சண்முகம், குத்தாலம் மேற்கு ஒன்றிய செயலாளர் மதன்ராஜ், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
