BREAKING NEWS

மருத்துவ சிகிச்சைக்காக நிதி உதவி வழங்கிய நண்பர்கள்

ஈரோட்டில் ஸ்ரீ முருகப்பெருமான் அன்னதானம் சமூக
சேவகர்கள் நலச்சங்கம் மற்றும்
கருங்கல்பாளையம் நண்பர்கள் பல்வேறு சமூக சேவைகளை செய்து வருகின்றனர்.
அன்னதானம் மற்றும் மருத்துவ உதவிகள் போன்ற ஏராளமான உதவிகளை செய்து வரும் நண்பர்களிடம் ஈரோடு
அக்ரஹாரம் பகுதியில் வசிக்கும் ஸ்ரீதேவி தனக்கு விபத்து ஏற்பட்டு தலையில் அறுவை சிகிச்சை செய்துள்ளதாகவும், மீண்டும் மறு அறுவை சிகிச்சை செய்வதற்கு பொருளாதார பிரச்சினையில் சிரமப்படுவதாகவும் தங்களுடைய உதவி தேவை என்று கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் மூன்றே நாட்களில் நண்பர்கள் இணைந்து 24 ஆயிரம் நிதி உதவி வழங்கினார். நிதி உதவி பெற்றுக்கொண்ட ஸ்ரீதேவி நண்பர்களுக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார். அவரது கணவரும் நன்றி தெரிவித்தார்.

Share this…

CATEGORIES
TAGS