BREAKING NEWS

மருத்துவரை பணியிடம் மாற்றம் செய்ததை கண்டித்து சுமார் 150 க்கும் மேற்பட்டோர் எண்ணமங்கலம் பேருந்து நிலையத்தில் 2 அரசு பேருந்துகளை சிறை பிடித்து சாலை மறியல்.

மருத்துவரை பணியிடம் மாற்றம் செய்ததை கண்டித்து சுமார் 150 க்கும் மேற்பட்டோர் எண்ணமங்கலம் பேருந்து நிலையத்தில் 2 அரசு பேருந்துகளை சிறை பிடித்து சாலை மறியல்.

அந்தியூர் அருகே உள்ள எண்ணமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராக பணியாற்றி வரும் சரவணபிரபு என்பவரை தற்காலிகமாக சின்னத்தம்பி பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பணியிட மாற்றம் செய்து அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

 

இதனைத் தொடர்ந்து அவரை பணியிட மாற்றம் செய்யக்கூடாது என கூறி சுமார் 150க்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் எண்ணமங்கலம் பேருந்து நிலையத்தில் இரண்டு அரசு பேருந்துகளை சிறை பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

 

 

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த துணை தாசில்தார் ஜெகநாதன் வட்டார மருத்துவ அதிகாரி டாக்டர் சக்தி கிருஷ்ணன் அந்தியூர் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் பவானி மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பொன்னம்மாள் வருவாய் ஆய்வாளர் சுதாகர்.

 

கிராம நிர்வாக அலுவலர் சதீஷ்குமார் .சப் இன்ஸ்பெக்டர்கள் கார்த்தி.விஜயகுமார். மற்றும் போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மீண்டும் மருத்துவரை இதே பகுதியில் பணிபுரிய ஆவணம் செய்யப்படும் என தெரிவித்தை தொடர்ந்து சாலை மறியல் கைவிடப்பட்டது இதனால் பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )