மழையால் பாதிக்கப்பட்ட பருத்திக்கு உரிய நிவாரணம் வழங்க வலியுறுத்தி மன்னார்குடியில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் நல உரிமை சங்கத்தினர் 200க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மழையால் பாதிக்கப்பட்ட பருத்திக்கு உரிய நிவாரணம் வழங்க வலியுறுத்தி மன்னார்குடியில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் நல உரிமை சங்கத்தினர் 200க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கூத்தாநல்லூர் லெட்சுமாங்குடியில் வெண்ணாற்றில் இருந்து பிரிந்து கீழே பனங்காட்டாங்குடி வரை சுமார் 350 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு பாசனம் வழங்கி வந்த பாசன வாய்க்கால் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக தூர்வாரப்படவில்லை இதனால் பெரிதளவு விவசாயம் செய்வதற்கு ஆறுகளில் இருந்து தண்ணீர் கொண்டு செல்ல முடியாத நிலைக்கு விவசாயிகள் இருந்து வருகின்றனர்.
எனவே ஆறு, பாசன மற்றும் வடிகால் வாய்க்கால்கள் முறையாக தூர் வாரிட வேண்டும் , 40 ஆண்டு காலமாக குடியிருந்து வரும் அதங்குடி கிராம விவசாய மற்றும் விவசாய கூலி தொழிலாளர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரியும் , தொடர்ந்து பெய்த கனமழையால் கோடை நெல் ,பருத்தி , எள் சாகுபடி மிகப்பெரிய அளவிற்கு பாதிப்பு ஏற்பட்டு அதனை முழுமையாக அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பருத்தி சாகுபடிக்கு உரிய நிவாரணம் வழங்கிட வலியுறுத்தி மன்னார்குடி வருவாய் கோட்டாட்சியரிடம் கோரிக்கை மனு கொடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்காத மன்னார்குடி வருவாய் கோட்டாட்சியர் கண்டித்து திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் நல உரிமை சங்கத்தின் சார்பில் 200க்கும் மேற்பட்டோர் கண்டன முழக்கங்கள் எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.