BREAKING NEWS

மாசி மகத்தை முன்னிட்டு, திருவையாறு காவிரி கரை புஷ்பமண்டப படித்துறையில் ஏராளமானவர்கள் மறைந்த தங்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிப்பட்டனர்.

ஆண்டு தோறும் மாசி மாதம் மகம் நட்சத்திரம் அன்று மாசி மக பெருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.

இன்று மாசி மகத்தை ஒட்டி, தஞ்சை மாவட்டம் திருவையாறு காவிரி கரை புஷ்ப மண்டப படித்துறையில் ஏராளமானவர்கள் கூடினார்கள்.

தஞ்சை மாவட்டம் மட்டுமின்றி பிற மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான மக்கள் திதி கொடுக்க வந்ததால் மக்கள் வசதிக்காக காவிரி ஆற்றில் ஆழ்குழாய் அமைத்து குளிப்பதற்கு ஏற்பாடு செய்யபட்டு இருந்தது.

இதில் புனித நீராடிய மக்கள் காய்கறிகள், கீரை, அரிசி ஆகியவற்றை புரோகிதர்களுக்கு தானமாக வழங்கி மறைந்த முன்னோர்களை நினைத்து எள் பிண்டம் பிடித்து காவிரியில் விட்டு தர்ப்பணம் செய்து சென்றனர்.

CATEGORIES
TAGS